கம்பராமாயணம் 10147 · யுத்த 37.134

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பின்னும் ஓர் வரம், ‘வானரப் பெருங்கடல் பெயர்ந்து
மன்னு பல் வனம், மால்வரைக் குலங்கள், மற்று இன்ன
துன் இடங்கள், காய் கனி கிழங்கோடு தேன் துற்ற,
இன் உண் நீர் உளவாக! என விளம்பிடுக ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

பின்னும் ஓர் வரம் - மீண்டும் ஒரு வரம்; வானரப் பெருங் கடல் பெயர்த்து மன்னு - வானர சேனையானது இடம் மாறிச் சென்று நிலைக்கின்ற; பல்வனம், மால் வரைக் குலங்கள், மற்று இன்ன துன் இடங்கள் - பல காடுகள், பெரிய மலைக் கூட்டங்கள், மற்றும் இதுபோன்ற வானரம் வாழ் இடங்கள் எல்லாம்; காய், கனி, கிழங்கோடு தேன் துற்ற இன் உண் நீர் உளவாக' - காயும் பழமும் கிழங்குகளும் நிறைந்து, தேன்களும் நெருங்க, உண்ணுதற்கு இனிய குடிநீரும் நிரம்பப் பெறுக; 'என இயம்பிடுக' - என்று வரம் தருக; என்றான் - என்று கேட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. one more boon: 'Wherever the great sea of monkeys moves
  2. and settles, in the many forests, the clusters of great mountains, and other
  3. such crowded places, may there be unripe fruit, ripe fruit and roots, with honey abounding,
  4. and sweet water to drink; say this as your boon,' he asked.

What the poem says

Irāmaṉ's second request is also for his monkey allies: that wherever their vast army goes to live, in forests and mountain ranges, they should always find fruit, roots, honey and sweet drinking water.

The monkey host is called a sea because of its size. Irāmaṉ's boons repay the debt he owes to those who fought for him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṉṉum ōr varam, ‘vāṉarap peruṅ kaṭal peyarntu
maṉṉu pal vaṉam, māl varaik kulaṅkaḷ, maṟṟu iṉṉa
tuṉ iṭaṅkaḷ, kāy kaṉi kiḻaṅkōṭu tēṉ tuṟṟa,
iṉ uṇ nīr uḷavāka! eṉa iyampiṭuka ‘eṉṟāṉ.