கம்பராமாயணம் 10150 · யுத்த 37.137

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கும்ப கன்னனோடு இந்திரசித்து, வெங்குலப் போர்
வெம்பு வெஞ்சினத்து இராவணன் முதலிய வீரர்
அம்பின் மாண்டுள வானரம் அங்கு வந்து ஆர்ப்ப,
உம்பர் யாவரும் இராமனைப் பார்த்து, இவை உரைத்தார்.

பொருள் · Meaning in Tamil

கும்பகன்னனோடு இந்திர சித்து -; வெங்குலப் போர் வெம்பு வெஞ்சினத்து இராவணன் முதலிய வீரர்- கொடிய உயர்ந்த போரில் சீறுகின்ற கொடுஞ்சினத்தை உடைய இராவணன் முதலிய வீரர்களும்; அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப - அம்பினால் இறந்து போன குரங்குகள் ஒன்று சேர வந்து ஆரவாரம் செய்ய; உம்பர் யாவரும் - தேவர்கள் எல்லாம்; இராமனைப் பார்த்து -; இவை உரைத்தார் - பின் வருவனவற்றைச் சொன்னார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Slain by the arrows of Kumpakaruṇaṉ, of Intiracittu, and of the warriors
  2. led by Irāvaṇaṉ, burning with fierce rage in cruel lofty war,
  3. the monkeys that had died all came together and roared;
  4. then all the gods looked at Irāmaṉ and spoke these words.

What the poem says

The revived monkeys, once killed by the arrows of Kumpakaruṇaṉ, Intiracittu, Irāvaṇaṉ and the other demon champions, gather and shout for joy.

The gods now turn to Irāmaṉ with an urgent message, which the following verses deliver: the fourteen years of exile have run out, and Paratan's life is at stake.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kumpakaṉṉaṉōṭu intiracittu, veṅ kulap pōr
vempu veñ ciṉattu irāvaṇaṉ mutaliya vīrar
ampiṉ māṇṭuḷa vāṉaram aṭaṅka vantu ārppa,
umpar yāvarum irāmaṉaip pārttu, ivai uraittār.