கம்பராமாயணம் 10152 · யுத்த 37.139
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வஞ்சர் இல்லை இவ் அண்டத்தின் எனும்படி மடித்த கஞ்ச நாள் மலர்க் கையினாய் - இவ்வுலகத்தில் வஞ்சகர்களே இல்லை என்னும்படி அழித்தொழித்த தாமரையின் அன்றலர்ந்த மலர்போலும் கைகளை உடைய இராகவனே! அன்னை சொல் கடவா - கைகேயியாகிய தாய் சொன்ன சொல்லை மீறாத; அஞ்சொடு அஞ்சு நான்கு எனும் ஆண்டு போய் முடிந்த - பதினான்கு என்கின்ற ஆண்டுகள் சென்று கழிந்து விட்டன; இன்று பஞ்சமிப் பெயர் படைத்துள திதி பயந்த - இன்றைய நாள் பஞ்சமி என்னும் பெயர் பெற்றுள்ள திதியைப் பெற்றுள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You whose hands are like the lotus blooming at dawn, who destroyed so
- that men say there are no deceivers left in this universe! Never transgressing your mother's word,
- the years counted as five and five and four have passed and ended;
- today has brought the lunar day that bears the name Pañcamī.'
What the poem says
The gods continue: Irāmaṉ, obedient to the command of his mother Kaikēyi, has completed the fourteen years of exile, counted here as five plus five plus four. Today is the fifth lunar day, Pañcamī, the very day the term ends.
The praise of Irāmaṉ's hands recalls that he has rid the world of deceitful demons.