கம்பராமாயணம் 10153 · யுத்த 37.140

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘இன்று சென்று, நீ பரதனை எய்தலை என்னின்,
பொன்றுமால் அவன் எரியிடை; அன்னது போக்க,
வென்றிவீர! நீ போதியால் ‘ என்பது விளம்பா,
நின்ற தேவர்கள் நீங்கினார்; இராகவன் நினைந்தான்.

பொருள் · Meaning in Tamil

வென்றிவீர! - வெற்றியை உடைய வீரனே; நீ இன்று சென்று பரதனை எய்திலை என்னின் அவன் எரியிடை பொன்றுமால் - நீ இன்றே போய் அயோத்தியில் பரதனை அடையவில்லை ஆனால் அப்பரதன் நெருப்பில் வீழ்ந்து உயிர்துறப்பான்; நீ போதியால்' - நீ (விரைந்து அயோத்திக்குப் போவாயாக; என்பது விளம்பா - என்பதைச் சொல்லி; நின்ற தேவர்கள் நீங்கினார் - (வரம் கொடுத்து ஆண்டு) நின்ற தேவர்கள் விலகிச் சென்றார்கள்; இராகவன் - ; நினைந்தான் - புறப்பட எண்ணினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If you do not go today and reach Paratan,
  2. he will perish in the fire; to prevent that,
  3. victorious hero, you must go.' Saying this,
  4. the gods who stood there departed; and Irāghavaṉ took thought.

What the poem says

Paratan had vowed that if Irāmaṉ did not return the moment the fourteen years ended, he would enter the fire and die. The gods warn Irāmaṉ that he must reach Ayōttī today to save him, and then they leave.

Irāmaṉ, here called Irāghavaṉ, descendant of Raghu, begins at once to plan his departure.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘iṉṟu ceṉṟu, nī parataṉai eytilai eṉṉiṉ,
poṉṟumāl avaṉ eriyiṭai; aṉṉatu pōkka,
veṉṟi vīra! nī pōtiyāl ‘ eṉpatu viḷampā,
niṉṟa tēvarkaḷ nīṅkiṉār; irākavaṉ niṉaintāṉ.