கம்பராமாயணம் 10157 · யுத்த 37.144
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனந்தம் அண்ட கோடிகள் ஒத்து - கணக்கற்ற உலக உருண்டைகள் கோடிக்கணக்காகச் சேர்ந்தாற் போலப் பெரியதாய்; ஆயிரம் அருக்கர் விண்டது ஆம் என விசும்பிடைத் திசை எலாம் விளங்க - ஆயிரம் சூரியர்கள் ஒருசேர வெளிப்பட்டுப் பிரகாசித்தாற் போலத் தன் பேரொளியால் ஆகாயத்திடத்துத் திக்குகள் எல்லாம் விளக்கமுறவும்; ஆயிரகோடி கண்டைகள் மழை எனக் கலிப்ப - (தன்னிடம் கட்டிய) ஆயிரகோடிக் கணக்கான பெரிய மணிகள் மழை போல ஒலிக்கவும் (புட்பக விமானத்தை) அரக்கர்தம் கோமான் - அரக்கர்க்கு அரசனான வீடணன்; நொடியினின் கொண்டு அணைந்தனன் - ஒரு மாத்திரைப் பொழுதில் (இராமன் முன்) கொண்டு வந்து சேர்த்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like endless millions of worlds together, and as if a thousand suns
- had burst forth, making all the directions of the sky shine,
- with thousands of millions of bells clamouring like rain,
- the king of the demons brought it there in an instant.
What the poem says
Vīṭaṇaṉ, now king of the demons, brings the Puṣpaka in a moment. The poet describes its vastness, as large as countless worlds together, and its splendour, as if a thousand suns had risen at once and lit every quarter of the sky.
The countless bells hung on it ring out like the roar of a rainstorm.