கம்பராமாயணம் 10160 · யுத்த 37.147
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து - உலகம் உண்ட திருமாலினது மணிகளால் அழகு பெற்ற வயிற்றை ஒத்து; அனிலன் சண்ட வேகமும் குறைதர - வாயு தேவனது அளப்பரிய ஊழிக்கால வேகமும் குறைவு என்னும்படி; நினைவு எனும் தகைத்தாய் - மனோ வேகம் என்று சொல்லும் படியாக; விண்தலம் திகழ் விமான புட்பகம் என்னும் அதன் மேல் - விண்ணிடத்தே விளங்குகின்ற புட்பக விமானம் என்கின்ற அதன்மேல்; கொண்ட கொண்டல் - ஏறிய கார்நிறத்தண்ணல்; தன் துணைவரைப் பார்த்து - தன் துணைவர்களாகிய விபீடணன், சுக்ரீவன் முதலியவர்களைப் பார்த்து; இவை குணித்தான் - பின் வரும்சொற்களை ஆலோசித்துக் கூறலானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the jewel-adorned belly of him who swallowed the universe, making
- even the fierce speed of the Wind seem slow, swift as thought itself,
- was the aerial car called Puṣpaka that shines in the sky; upon it
- the dark rain-cloud who had mounted looked at his companions and weighed these words.
What the poem says
The Puṣpaka is compared to the belly of Viṣṇu, who swallows all the worlds at the end of an age, since it can hold so vast a company. It flies faster than the wind, as fast as thought.
Irāmaṉ, dark as a rain-cloud, stands on it and turns to his allies, Vīṭaṇaṉ, Cukkirīvaṉ and the rest, to take leave of them in the verses that follow.