கம்பராமாயணம் 10165 · யுத்த 37.152
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஐயன் இம் மொழி புகன்றிட, துணுக்கமோடு அவர்கள்,
மெய்யும் ஆவியும் குலைதர, விழிகள் நீர் ததும்ப,
செய்ய தாமரைத் தாளிணை முடி உறச் சேர்த்தி,
‘உய்கிலோம், உனை நீங்கின் ‘என்று இனையன உரைத்தார்.
பொருள் · Meaning in Tamil
ஐயன் இம்மொழி புகன்றிட - இராமன் இச்சொற்களைச் சொல்ல; அவர்கள் துணுக்கமோடு - துணைவர்கள் நடுக்கத்தோடு; மெய்யும் ஆவியும் குலைதர - உடம்பும் உயிரும் நிலைதடுமாற; விழிகள் நீர் ததும்ப - கண்களில் நீர் குலுங்க; செய்ய தாமரைத் தாள்இணை முடி உறச் சேர்த்தி - இராமனது சிவந்த தாமரையனைய திருவடி இணைகளைத் தங்கள் முடியின்கண் பொருந்த வணங்கி; 'நின்னை நீங்கின் உய்கிலேம்' என்று - உன்னைப் பிரிந்தால் உயிர் வாழேம் என்று, இனையன உரைத்தார் - பின்வரும் வாசகங்களைச் சொன்னார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the lord spoke these words, they, in dismay,
- their bodies and souls shaken, their eyes brimming with tears,
- pressed their crowns to his pair of red lotus feet,
- and said such words as 'We cannot live if we are parted from you.'
What the poem says
Irāmaṉ's allies are stricken at the thought of being sent away. Trembling and in tears, they bow with their heads on his feet.
They tell him that they cannot survive separation from him, and in the next verse they make their request.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aiyaṉ im moḻi pukaṉṟiṭa, tuṇukkamōṭu avarkaḷ,
meyyum āviyum kulaitara, viḻikaḷ nīr tatumpa,
ceyya tāmarait tāḷ iṇai muṭi uṟac cērtti,
‘uykilēm, niṉṉai nīṅkiṉ ‘eṉṟu iṉaiyaṉa uraittār.