கம்பராமாயணம் 10171 · யுத்த 37.158
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(புட்பகம்) பத்து நால் என அடுக்கிய உலகங்கள் பலவின் மெத்து யோனிகள் ஏறினும் வெளியிடம் மிகும் - கீழ்ஏழ், மேல் ஏழ் என அடுக்கிக் கூறப்படும் பதினான்கு உலகங்கள் பலவற்றினும் உயர்த்துக் கூறப்படும் உயிர் வர்க்கங்கள் அனைத்தும் ஏறினாலும் வெற்றிடமானது மிகுதியாக இருக்கும்; இதன் நிலை - இந்த புட்பகவிமானத்தின் தன்மையை; முத்தர் ஆனவர் மொழிகுவது அல்லால் - வீடு பெற்ற மெய்ஞ்ஞானிகள் தம் ஞானத்தால் கூறுவதற்கு முடியுமே அல்லாமல்; இத்தராதலத்து - இம் மண்ணுலகில்; இயம்புதற்கு யாரே உரியவர் - சொல்லுவதற்கு யாரால் இயலும். (இயலாது என்றபடி)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even if all the teeming kinds of creatures of the many worlds
- ranked as ten and four were to climb aboard, there would be room to spare;
- except for the freed souls who might describe its nature,
- who on this earth is able to tell of it?
What the poem says
The poet marvels at the Puṣpaka's capacity. Even if every species of living being in all fourteen worlds, the seven above and the seven below, boarded it, empty space would remain.
Only liberated sages, through their spiritual insight, could describe it; no one on earth could.