கம்பராமாயணம் 10172 · யுத்த 37.159
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விழுமிய குணத்து வீரன் - சிறந்த நற்குணங்களால் பெருமை பெற்ற இராமன்; எழுபது வெள்ளத்தோரும் இரவி கான் முளையும் எண்ணின் வழு இலா இலங்கை வேந்தும் வான் பெரும் படையும் சூழ - எழுபது வெள்ளம் குரங்குச் சேனையில் உள்ளாரும் சுக்ரீவனும் கருத்தில் சிறிதும் குறையில்லாத வீடணனும் மிகப் பெரிய அவனது அரக்கர்படையும் சுற்றியிருப்ப; தழுவு சீர் இளைய கோவும் சனகன் மாமயிலும் போற்ற - புகழ் தழுவும் இலக்குவனும் சானகியும் துதிக்க; விமானத்து உம்பர் விளங்கினன் - விமானத்தின் மேல் விளக்க முற்றுத் தோன்றினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With those of the seventy hosts, the Sun's offspring, the king of Ilaṅkai
- faultless in thought, and the vast great army surrounding him,
- while the younger prince of abiding fame and Caṉakaṉ's great peahen praised him,
- the hero of noble qualities shone on top of the car.
What the poem says
Irāmaṉ stands resplendent on the Puṣpaka, surrounded by the monkey hosts, Cukkirīvaṉ, son of the Sun, and Vīṭaṇaṉ with his army.
Ilakkuvaṉ and Cītai, Caṉakaṉ's daughter, compared to a graceful peahen, are at his side honouring him.