கம்பராமாயணம் 10173 · யுத்த 37.160

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அண்டமே போன்றது ஐயன் புட்பகம்; அண்டத்து உம்பர்
எண்தரும் குணங்கள் இன்றி, முதல் இடை ஈறு இன்று ஆகி,
பண்டை நான்மறைக்கும் எட்டாப் பரஞ்சுடர் பொலிவதே போல்,
புண்டரீகக் கண்வென்றிப் புரவலன் பொலிந்தான் மன்னோ

பொருள் · Meaning in Tamil

ஐயன் புட்பகம் அண்டமே போன்றது - இராமன் ஏறியிருந்த புட்பகவிமானம் அண்ட உருண்டையைப் போல் இருந்தது; அண்டத்து உம்பர் - அவ் அண்டத்தின் மேலாக, எண் தரும் குணங்கள் இன்றி முதல் இடை ஈறு இன்றி ஆகி பண்டை நான் மறைக்கும் எட்டாப் பரஞ்சுடர் பொலிவதே போல் - நினைத்தற்குரிய குணங்கள் இல்லாமல், பிறப்பு வளர்ப்பு அழிவு இல்லாததாய் ஆகி பழைய நால் வேதங்களுக்கும் காணக்கிடைக்காத பரம்பொருள் விளங்கும் தன்மை போல; புண்டரீகக் கண் வென்றிப் புரவலன் பொலிந்தான் - தாமரை மலர் போன்ற கண்களை உடைய வெற்றி பெற்ற காத்தற்கடவுளாகிய திருமால் விளங்கினான்.

மன், ஓ, அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lord's Puṣpaka was like the cosmic egg itself; and as above the universe,
  2. without qualities that can be counted, without beginning, middle or end,
  3. beyond reach even of the ancient four Vedas, the supreme light shines,
  4. so the lotus-eyed victorious protector shone.

What the poem says

The Puṣpaka is compared to the whole universe, imagined as a great egg, and Irāmaṉ upon it to the Supreme Being who shines beyond the universe.

That Supreme is beyond all attributes, has no birth, growth or end, and cannot be fully grasped even by the Vedas. Irāmaṉ, lotus-eyed and victorious, is Viṣṇu the protector shining in the same way.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṭamē pōṉṟatu aiyaṉ puṭpakam; aṇṭattu umpar
eṇ tarum kuṇaṅkaḷ iṉṟi, mutal iṭai īṟu iṉṟi āki,
paṇṭai nāṉmaṟaikkum eṭṭāp parañcuṭar polivatē pōl,
puṇṭarīkak kaṇ veṉṟip puravalaṉ polintāṉ maṉṉō