கம்பராமாயணம் 10174 · யுத்த 37.161

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேனுடை அலங்கல் மோலிச் செங்கதிர்ச் செல்வன் சேயும்,
மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும், வெற்றித்
தானையும், பிறரும், மற்றைப் படைப்பெருந் தலைவர்தாமும்
மானுட வடிவங் கொண்டார், வள்ளல்தன் வாய்மைதன்னால்.

பொருள் · Meaning in Tamil

வள்ளல் தன் வாய்மை தன்னால் - இராமபிரானது அருள் மொழி ஆற்றலால்; தேனுடை அலங்கல் மெளலிச்செங்கதிர்ச் செல்வன் சேயும் - தேன் பொருந்திய மாலைசூடிய முடியணிந்த சூரியன் மகனாய சுக்கிரீவனும், மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும் - மீன் பொருந்திய கடலை அகழியாக உடைய இலங்கைக்கு அரசனாகிய வீடணனும்; வெற்றித் தானையும் - வெற்றி பெற்ற சேனையும்; பிறரும் மற்றைப் படைப்பெருந்தலைவர் தாமும் - மற்றவர்களும் ஏனைய சேனைத்தலைவர்களும் (குரக்கு வடிவும் அரக்க வடிவும் நீங்கி); மானுட வடிவம் கொண்டார் - மனித வடிவு கொண்டார்கள்.

இது புட்பகத்தின் செயலன்று என்பதற்காக 'வள்ளல் தன் வாய்மைதன்னால்' என்றார். மானுட வடிவம் பிறர்காண்டற்கு என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The son of the red-rayed lord, with a honeyed garland on his crown,
  2. the king of Ilaṅkai whose moat is the fish-filled sea, the victorious
  3. army, the others, and the rest of the great captains of the host
  4. took human form, through the truthful word of the generous one.

What the poem says

As they travel, Cukkirīvaṉ, Vīṭaṇaṉ, the army and its leaders all leave their monkey and demon shapes and take human form. They will be entering the human city of Ayōttī.

The poet stresses that this change came about through the power of Irāmaṉ's word, not through any magic of the Puṣpaka. Taking human form was so that others could look upon them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēṉuṭai alaṅkal maulic ceṅ katirc celvaṉ cēyum,
mīṉuṭai akaḻi vēlai ilaṅkaiyar vēntum, veṟṟit
tāṉaiyum, piṟarum, maṟṟaip paṭaip peruntalaivar tāmum
māṉuṭa vaṭivam koṇṭār, vaḷḷaltaṉ vāymaitaṉṉāl.