கம்பராமாயணம் 10180 · யுத்த 37.167

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பைந்தொடி! - பசிய வளையல் அணிந்த சானகியே!; இந்திரற்கு அஞ்சி மேல்நாள் இருங்கடல் புக்கு நீங்காக் கந்தர சயிலம் - இந்திரனுக்குப் பயந்து முன்னாளில் பெரிய கடலுள் புகுந்து அதை விட்டு வெளி வராத குகைகளை உடைய மலை; தன்னைக் கண்டவர் வினைகள் தீர்க்கும் கந்தமாதனம் என்று ஓதும் கிரி - தன்னைப் பார்த்தவர்களது தீவினைகளைத் தீர்க்கக்கூடிய கந்தமாதனம் என்று சொல்லப் படுகிற மலை; இவண் கிடப்ப கண்டாய் - இங்கே இருப்பதைப் பார்ப்பாயாக; அடைத்த சேது பாவனம் ஆயது' என்றான் - (இந்த மலைத்தொடர்பால்) கடலை அடைத்த அணை பரிசுத்தம் உடையதாக ஆயிற்று என்று சொன்னான்.

மலைகளின் சிறகுகளை இந்திரன் அரிந்தமையின் அவனுக்குப் பயந்து கடலுட்புக்கு ஒளிந்தன சில மலைகள். கந்தரம் - குகை. பாவனம் - தூய்மை. இனி கடல் அடைத்த சேதுவாகிய அணையால் கந்தமாதனம் தூய்மை பெற்றது என்றும் கொள்ள இடம் உண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Fearing Indra, long ago, the hill with caves that entered the vast sea
  2. and never left it, the mountain that removes the sins of those who see it,
  3. the hill they call Kantamātaṉam, lies here, see;
  4. lady of fresh bangles, the causeway that dammed the sea has become holy,' he said.

What the poem says

The myth behind this verse: mountains once had wings, and Indra cut them off; some mountains fled into the sea to escape him. One is Kantamātaṉam, a hill whose mere sight removes sin.

Because the causeway joins this holy hill, Irāmaṉ says, it has itself become sacred. The commentary notes the reverse reading is also possible: the hill was sanctified by the causeway.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘intiraṟku añci, mēl nāḷ, iruṅ kaṭal pukku, nīṅkāk
kantara cayilam, taṉṉaik kaṇṭavar viṉaikaḷ tīrkkum
kantamātaṉam eṉṟu ōtum kiri ivaṇ kiṭappa kaṇṭāy;
paintoṭi! aṭaitta cētu pāvaṉam āyatu ‘eṉṟāṉ.