கம்பராமாயணம் 10181 · யுத்த 37.168

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கங்கையோடு, யமுனை, கோதாவிரியொடு களிந்தை சூழ்ந்த
பொங்குநீர் நதிகள் யாவும், படிந்து அலால், புன்மை போகா;
சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே.

பொருள் · Meaning in Tamil

கங்கையோடு யமுனை கோதாவரி நருமதை காவேரி - ; பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால், புன்மை போகா - என்று கூறப்படுகிற மிகுந்த நீரினையுடைய ஆறுகள் யாவும் தம்முள் முழுகினால் அல்லாமல் முழுகியவர்களுடைய பாவம் போகா; சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும் இங்கு இதின் - சங்குகளை வீசுகின்ற அலைகளை உடைய கடலில் தடுத்துக் கட்டப் பெற்ற இந்த அணை என்று சொல்லப்படுகிற இங்கு இதனை; எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் - பார்த்தவர்கள் (சந்தித்தவர்கள் பாவம் எல்லாம் நீங்கும்.

அன்று, ஏ, அசைகள். 'அன்றே நீங்கும்' என்றுகூட்டி அன்றைக்கே நீங்கும் எனப்பொருள் உரைப்பினும் அமையும். புண்ணிய நதிகளினும் புகழ் மிக்கது சேது என்றதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The Gaṅgā, the Yamunā, the Kōtāvari, the Narmadā, the Kāvēri,
  2. all the rivers of swelling water remove impurity only when one bathes in them;
  3. but this causeway that dams the sea whose waves fling up conches,
  4. here, all the impurity of those who merely come before it departs.

What the poem says

Irāmaṉ compares the causeway with India's sacred rivers. The Ganges, Yamunā, Godāvarī, Narmadā and Kāvēri purify only those who bathe in them, but the causeway purifies anyone who merely sees it.

The causeway is therefore holier than the holy rivers. The closing particles can also be read as 'that very day', meaning the sins vanish at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṅkaiyōṭu, yamuṉai, kōtāvari narumatai kāvēri
poṅku nīr natikaḷ yāvum, paṭintu alāl, puṉmai pōkā;
caṅku eṟi taraṅka vēlai taṭṭa ic cētu eṉṉum
iṅku itiṉ etirntōr puṉmai yāvaiyum nīṅkum aṉṟē.