கம்பராமாயணம் 10186 · யுத்த 37.173
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இது தமிழ் முனிவன் வைகும் இயல்தருகுன்றம் - இது தமிழ் முனிவனாகிய அகத்தியன் தங்கியிருந்து தமிழிலக்கணத்தைத் தந்த பொதியமலை; முன் நாறு அது வளர் மணி மால் ஓங்கல் - முன்னால் தோன்றுகின்ற அது மணம் வீசி வளர்கின்ற திருமால் இருஞ் சோலை மலை; உட் புறத்து உயர்ந்து தோன்றும் அது திகழ் அனந்த வெற்பு'- இடைக்கண்ணே உயரமாகத் தோன்றுகிற அது விளங்குகிற திருவேங்கட மலை; என்று அருள் தர - என்றிவ்வாறு இராமபிரான் உரைத்தருள் செய்ய; (சீதை) அனுமன் தோன்றிற்று எது? என- அனுமன் தங்களைச் சந்திக்கத் தோன்றியது எந்த இடத்தில் என்று கேட்க; அணங்கை நோக்கி - சீதையைப் பார்த்து; இராமன் - ; இற்று என சொன்னான் - இந்த இடத்தில்தான் என்று (ருசியமுக பர்வதத்தைக் காட்டிச் சொன்னான்.
'இயல தரு குன்றம்' என்று பாடம் கொண்டு சிறப்புமிகுந்த இயல்புடைய மலை என்பாரும் உளர் தமிழின் முதல் இலக்கணம் அகத்தியனால் செய்யப் பட்ட அகத்தியம் என்பது நோக்கி 'இயல் தரு குன்றம்' என்றது பொருந்துவதே. பிராட்டியின் திருவுளத்தே அனுமன்பால் எழுந்த பேரன்பு அனுமன் சந்தித்த இடத்தைக் கேட்டறிய வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டியது என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'This is the hill where the Tamil sage dwells, which gave grammar; that fragrant one ahead
- is the great jewelled mountain of Māl that grows; the one rising high beyond
- is the shining hill of Aṉantaṉ,' he graciously said; and she asked, 'Where did Aṉumaṉ
- appear?' and Irāmaṉ, looking at the lady, said, 'It was like this, here.'
What the poem says
Flying over the Tamil country, Irāmaṉ points out the Potiyil hill, where Akattiyaṉ, the sage credited with the first Tamil grammar, lives; Tirumāliruñcōlai, sacred to Viṣṇu; and Tiruvēṅkaṭam, the hill of Aṉantaṉ, Viṣṇu's serpent.
Cītai, full of affection for Aṉumaṉ, asks where he first met Irāmaṉ, and Irāmaṉ shows her the place, the Ṛṣyamūka hill.