கம்பராமாயணம் 10187 · யுத்த 37.174

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான், மகரநீர் சூழ்
வேலியைக் கடக்க வாவும் விறல் உடையவனை வீட்டி,
நூல் இயல் தரும நீதி நுனித்து அறங்குணித்த மேலோர்
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரு புரம் ஈது ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான், மகரநீர் சூழ் வேலையைக் கடக்கப் பாயும் விறல் உடையவனை வீட்டி - வாலி என்று கூறப்படுகிற அளவு படாத பேராற்றலோடு கூடிய வலிமையுடையவனும் சுறாமீன்கள் சுற்றும் கடலைத் தாண்டிச் செல்லும் வெற்றி உடையவனும் ஆகியவனை அழித்து; நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர் போல்- நூல்களிற் கூறியுள்ள இயல்பின்படி தரும நீதியை நுட்பமாகக் கருதி அறத்தையே கருதும் சீர்மை உடைய மேலோர்கள் போன்ற; இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது என்றான் - இயல்பினை உடைய சூரியன் மகனாய சுக்ரீவன் தங்கியுள்ள கிட்கிந்தை இது என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Having slain the one called Vālī, of boundless strength and might,
  2. who had the power to leap across the sea encircled by makara-filled waters,
  3. this is the city where dwells the Sun's son, like the noble ones
  4. who weigh with subtlety the justice and dharma that the scriptures set out.'

What the poem says

Next Irāmaṉ shows Cītai Kiṭkintai, the monkey capital, where Cukkirīvaṉ, son of the Sun, now rules after Irāmaṉ killed his brother Vālī. Vālī was so mighty that he could leap across the ocean.

Cukkirīvaṉ is praised as being like the wise who follow dharma as the scriptures teach it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vāli eṉṟu aḷavu il āṟṟal vaṉmaiyāṉ, makara nīrcūḻ
vēlaiyaik kaṭakkap pāyum viṟal uṭaiyavaṉai vīṭṭi,
nūl iyal taruma nīti nuṉittu aṟam kuṇitta mēlōr
pōl iyal tapaṉaṉ maintaṉ uṟaitarum puram ītu ‘eṉṟāṉ.