கம்பராமாயணம் 10188 · யுத்த 37.175

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐய! - இராமனே! கிட்கிந்தை - கிட்கிந்தா நகரம்; இதுவேல் - இதுவாக இருக்குமானால்; கேட்டி - நான் சொல்வதைக் கேட்பாயாக; ஆயவெள்ள மகளிர் இன்று ஆகி, வானோர் உட்கும் போர் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின் - தோழியர் கூட்டமான பெண்கள் இல்லாமல் தேவர்களும் அஞ்சும்படியான போர்ச்சேனை சுற்றியிருப்ப நான் ஒருத்தி மட்டும் இவ்விமானத்தில் அயோத்தி அடைந்தால்; எனது பெண்மை மட்கும்- என் பெண்தன்மை பொலிவு கெடும்; (ஆதலின் கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து' என்றாள் - தேன் நிரம்பிய பூங்கொத்துகள் பொருந்திய கூந்தல் உடைய கிட்கிந்தை மகளிரை இவ்விமானத்தில் ஏற்றிக் கோடல் செய்யத் தகும் முறைமை உடையது என்று கூறினாள்.

பெண்மை, நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்குணங்கள் உடைமையாம். கணவன் அருகிருக்கினும் பெரிய ஆண்கள் கூட்டத்தில் தனியே ஒரு பெண் இருத்தல் என்பது கூச்சம் தரும் ஆதலின் இவ்வாறு கூறினாள். ஆல், தான் உரையசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If this is Kiṭkintai, my lord, listen: my womanhood
  2. would suffer if, without a host of women around me, I alone
  3. came to Ayōttī amid an army that makes the gods afraid;
  4. it is right to take on board the women whose hair is full of honeyed flowers.'

What the poem says

Cītai makes a request. She feels it would offend feminine modesty to arrive at Ayōttī as the only woman among an army so huge that even the gods fear it.

She asks that the women of Kiṭkintai be brought aboard to accompany her. The commentary notes that even with her husband beside her, a lone woman among a great crowd of men would feel shy; traditional femininity is defined by modesty, innocence, fear and reserve.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kiṭkintai ituvēl, aiya! kēṭṭiyāl: eṉatu peṇmai
maṭkumtāṉ, āya veḷḷa makaḷir iṉṟu āki, vāṉōr
uṭkum pōrc cēṉai cūḻa oruttiyē ayōtti eytiṉ;
kaḷ kontu ār kuḻaliṉārai ēṟṟutal kaṭaṉmaittu ‘eṉṟāḷ.