கம்பராமாயணம் 10189 · யுத்த 37.176

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அம்மொழி இரவு மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப, அன்னான்
மெய்ம்மை சேர் அனுமன் தன்னை நோக்கி, ‘நீ விரைவின், வீர!
மைம்மலி குழலினாரை மரபினாற் கொணர்தி ‘என்ன,
செம்மை சேர் உள்ளத்து அண்ணல், கொணர்ந்தனன், சென்று மன்னோ.

பொருள் · Meaning in Tamil

அண்ணல் அம்மொழி இரவிமைந்தற்கு உரைப்ப - இராமன் சீதையின் அச்சொல்லை சுக்கிரீவனுக்குச் சொல்ல; அன்னான் மெய்ம்மை சேர் அனுமன்தன்னை நோக்கி - சுக்கிரீவன் சத்தியவானாகிய அனுமனைப் பார்த்து; 'வீர! நீ விரைவின் மைம்மலி குழலினாரை மரபினின் கொணர்தி' என்ன - வீர அனுமனே! நீ விரைந்து கருமை பரவிய கூந்தலுடைய நம் நகரப் பெண்களை அவரவர்க்குரிய முறைப்படி கொண்டு வருக என்று கூற; செம்மை சேர் உள்ளத்து அண்ணல் சென்று கொணர்ந்தனன் - மனக்கோட்டம் இல்லாத பெரியோனாகிய அனுமன் உடனே சென்று அழைத்து கொண்டு வந்தான்.

தான், உரையசை மன், ஓ, அசைநிலை. மரபு - அவரவர்க்குரிய தகுதி வரிசை 10127.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the lord told those words to the Sun's son, he
  2. looked at truthful Aṉumaṉ: 'Hero, swiftly
  3. bring the women with dark-flowing hair, each in her proper order,'
  4. and the noble one of upright heart went and brought them.

What the poem says

Irāmaṉ passes Cītai's wish to Cukkirīvaṉ, who sends Aṉumaṉ to fetch the women of Kiṭkintai, each with the honour proper to her rank.

Aṉumaṉ, truthful and straight of heart, goes at once and brings them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1am moḻi iravi maintaṟku aṇṇaltāṉ uraippa, aṉṉāṉ
meymmai cēr aṉumaṉtaṉṉai nōkki, ‘nī viraiviṉ, vīra!
maim mali kuḻaliṉārai marapiṉiṉ koṇarti ‘eṉṉa,
cemmai cēr uḷḷattu aṇṇal, koṇarntaṉaṉ, ceṉṟu maṉṉō.