கம்பராமாயணம் 10192 · யுத்த 37.179
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விசும்பில் போதா திகழ் புட்பகம் போத லோடும் - வானத்தில் எழுந்து விளங்குகிற புட்பக விமானம் சென்ற உடனே; (இராமன்) சூது ஆர் முலைத்தோகையை நோக்கி - சூதாடுகின்ற கருவியை ஒத்துப் பொருந்திய நகல்களை உடைய மயில் போல்வாளைப் பார்த்து; 'பேதாய் - இளம்பெண்ணே!; முன்தோன்று சூழல் கோதாவரி - முன்னே தோன்றுகிற இடம் கோதாவரியாகும்; மற்று அதன் மாடு உயர் குன்று - அதன் அருகில் உள்ள உயர்ந்த சிறிய மலைதான்; நின்னை - உன்னை (என்னிடமிருந்து) பிரிவுத்துயர் பீழை பிணித்தது' - பிரித்தலால் உண்டாகிய பிரிவு என்னும் துயர் நோயால் கட்டியது; என்றான் -
பிரிவுத்துயர் பீழை அவளுக்கும் இவனுக்கும் ஒத்ததாகும். அவள், இவனிடமிருந்து பிரியும்போது இவனும் அவளிடமிருந்து பிரிகின்றான் ஆதலின். பீழை - நோய்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as the Puṣpaka that shines in the sky had soared and gone on,
- looking at the peahen with breasts like gaming pieces, he said, 'The place that appears ahead
- is the Kōtāvari; and the high hill beside it, foolish innocent one,
- is where the pain of separation's grief bound you.'
What the poem says
The Puṣpaka continues north. Irāmaṉ points out the Godāvarī river and the hill beside it, near Pañcavaṭī, the place where Cītai was carried off and their separation began.
The commentary observes that the grief of separation belonged equally to both, since when she was parted from him he was parted from her. Her breasts are compared to the rounded pieces used in a game of dice.