கம்பராமாயணம் 10193 · யுத்த 37.180

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை! கேள் : இதுநீள்
தரத்து உவாசவர், வேள்வியர் தண்டகம்; அது தான்
வரத்து வாசவன் வணங்குறு சித்திர கூடம்;
பரத்துவாசனது உறைவிடம் இது ‘எனப் பகர்ந்தான்.

பொருள் · Meaning in Tamil

சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை! கேள் - தலைமுடியின் கண் (நறுமணமலர்களால்) வாசனையுண்ணும் வண்டுகள் ஒலிக்கின்ற பெண்ணே! கேட்பாயாக; இது நீள் தரத்து உவாசவர் வேள்வியர் தண்டகம் - இது உயர்ந்த தன்மையுடைய உபாசனை செய்கின்ற விரதிகளும் யாகம் செய்பவர்களாகிய முனிவர்களும் (உறைகின்ற) தண்டக ஆரண்யம்; அதுதான் வரத்து வாசவன் வணங்குறு சித்திரகூடம் - அதோ தோன்றுகிற இடமானது மேன்மையுடைய இந்திரனும் வணங்கத்தக்க சித்திர கூடமலை; இது பரத்துவாசவன் உறைவிடம்! - (அண்மையில் காணும்) இது பரத்துவாசமுனிவன் தங்கியுள்ள தவச்சாலையாகும்; எனப் பகர்ந்தான் - என்று சொன்னான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Listen, lady in whose hair fragrance-loving bees hum: this
  2. is Taṇṭakam of the devout worshippers of high rank and the sacrificers; that
  3. is Cittirakūṭam, which even Indra of boons bows to;
  4. this is the dwelling of Parattuvācaṉ,' he said.

What the poem says

The tour continues north. Irāmaṉ shows Cītai the Daṇḍaka forest, home of ascetics devoted to worship and sacrifice; the Citrakūṭa hill, revered even by Indra, where they lived early in the exile; and the hermitage of the sage Parattuvācaṉ, Bharadvāja, near the meeting of the Ganges and Yamunā.

The verse plays on similar sounds: vāca, uvācavar, vācavaṉ, Parattuvācavaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cirattu vāca vaṇṭu alampiṭu terivai! kēḷ: itu nīḷ
tarattu uvācavar, vēḷviyar taṇṭakam; atutāṉ
varattu vācavaṉ vaṇaṅkuṟu cittirakūṭam;
parattuvācavaṉ uṟaiviṭam itu ‘eṉap pakarntāṉ.