கம்பராமாயணம் 10194 · யுத்த 37.181

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மின்னை நோக்கி - சீதையைப் பார்த்து; அவ்வீரன் ஈது இயம்பிடும் வேலை - அந்த இராமன் இதனைச் சொல்லிக் கொண்டுள்ள போது; தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து - தனக்கு யாரும் ஒப்பில்லாத சிறந்த தவமுனிவனாகிய பரத்துவாசன்; உணர்ந்து; தன் அகத்தின் - தன் தவச்சாலையின் கண்; 'என்னை ஆளுடை நாயகன் எய்தினன்' என்னா - என்னையும் அடிமை கொண்டருளும் பரம் பொருளாகிய பெருமான் வந்துவிட்டான் என்று கருதி; துன்னு மாதவர் சூழ்தர - நெருங்கிய முனிவரர்கள் சுற்றிவர; எதிர்கொள்வான் - வரவேற்க; தொடர்ந்தான் - (இராமன்; வரும்வழியை நோக்கி வந்தான்.

'உணர்ந்து' என்பது அறிதலன்று; ஞானத்தால் இராமன் என்னாது பரம் பொருள் என உணர்தலாம். 'தன் அகத்தின்' என்பதற்குத் தன் உள்ளத்தின் கண்' என உரைப்பினும் அமையும். புறத்தே இராமன் என்ற நிலையில் இவன் முனிவர்களை வழிபடினும் அவர்கள் அவனைப் பரம்பொருளே என உள்ளத்தே தியானத்தால் உணர்ந்து தம்மை அடிமையாகவும் அவனை ஆண்டானாகவும் கருதுவர் என்பதை 'என்னை ஆளுடை நாயகன்' எனப் பரத்துவாசன் கூறியது உணர்த்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the hero was saying this, looking at his lightning-like lady,
  2. the sage without equal perceived it, and in his hermitage,
  3. saying 'The lord who rules me has come',
  4. with the throng of great ascetics around him, he set out to meet him.

What the poem says

Parattuvācaṉ, the incomparable sage, perceives through his spiritual insight that Irāmaṉ is arriving. He knows him not merely as a prince but as the Supreme Being, and calls him 'the lord who rules me'.

Surrounded by his disciples, he goes out to welcome him. The commentary notes that although Irāmaṉ outwardly honours sages as a man, the sages inwardly recognise him as God and regard themselves as his servants.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṉṉai nōkki, av vīraṉ ītu iyampiṭum vēlai
taṉṉai nēr ilā muṉivaraṉ uṇarntu, taṉ akattiṉ,
‘eṉṉai āḷuṭai nāyakaṉ eytiṉaṉ ‘eṉṉā,
tuṉṉu mā tavar cūḻ tara, etirkoḷvāṉ, toṭarntāṉ