கம்பராமாயணம் 10198 · யுத்த 37.185
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அடியின் வீழ்தலும் - (இராமன்) தன் அடியில்வீழ்ந்து வணங்கியவுடன்; எடுத்து - தூக்கி; நல் ஆசியோடு அணைத்து - நல்ல வாழ்த்துரையுடன் அணைத்துக்கொண்டு; முடியை மோயினன் நின்றுழி - இராமனது உச்சியை மோந்து நின்ற பொழுது; முளரி அம் கண்ணன் - தாமரைக் கண்ணனான இராமனது; சடில நீள் துகள் ஒழிதர - சடாபாரத்தில் உள்ள நீண்ட புழுதியானது நீங்கும்படி; நெடியோன் தனது கண் அருவி - உயர்ந்தவனாகிய பரத்துவாசன் தன்னுடைய கண்ணிலிருந்து அருவியாக வழிகின்ற நீரை; நெடிய காதல் அம்கலசம் அது - உயர்ந்து நின்ற தன் உள்ளத்தன்பாகிய கலசத்தால் முகந்து; ஆட்டினான் - நீராட்டித் தூய்மைசெய்தான்.
'நெடியோன்' பரத்துவாசனைக் குறித்தது. இனி, 'நெடியோன் அடியின் வீழ்தலும்' என்று முதற்கண்கூட்டி இராமன் எனலும் ஒன்று. உச்சி மோத்தல் குழந்தை மாட்டுப்பெற்றோர் அன்புச் செயலாகும். தந்தை நிலையில் உச்சிமோந்தான் என்க. அன்பாகிய கலசத்தால் கண்ணருவி நீர் கொண்டு இராமன் சடைப்புழுதி போக நீராட்டினான் என்பதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he fell at his feet, the sage raised him, embraced him with good blessings,
- and stood smelling the crown of his head; and so that the long dust
- in the matted hair of the lotus-eyed one might be washed away, the great one
- bathed him with the stream of his own eyes, from the deep pot of his love.
What the poem says
Parattuvācaṉ lifts Irāmaṉ from his feet, embraces and blesses him, and smells the top of his head, the traditional gesture of a parent toward a child; the sage acts as a father would.
His tears of love fall like a ritual bath and wash away the dust gathered in Irāmaṉ's matted hair during the long exile. His love is the vessel and his tears the holy water.