கம்பராமாயணம் 10199 · யுத்த 37.186

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கருகும் வார்குழல் சனகியோடு இளவல் கைதொழுதே,
அருகு சார்தர, அருந்தவன் ஆசிகள் வழங்கி,
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன், உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து, உளம் களித்தனன், பரிவால்.

பொருள் · Meaning in Tamil

கருகு வார்குழல் சனகியோடு - கருமையான நீண்ட கூந்தலையுடைய சீதையோடு; இளவல் கைதொழுதே அருகு சார்தர - இலக்குவன் கைகுவித்து வணங்கிப் பக்கத்தில் வர; அருந்தவன் - பரத்துவாசன்; ஆசிகள் வழங்கி - வாழ்த்துரைகள் கூறி; உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன் - மனம் கரைந்து வரும் கண்ணீர்ப் பெருக்கோடு; உவகை பருகும் ஆர் அமிழ்து ஒத்து பரிவால் உளம் களித்தனன் - மகிழ்ச்சியோடு பருகுகின்ற தேவர் அமுதத்தை உண்டால் ஒத்து அன்பினால் உளம் பூரித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the younger prince, with joined hands, came to his side
  2. with Caṉakaṉ's daughter of dark long hair, the great ascetic gave blessings,
  3. tears streaming from his melting love; as if he had drunk
  4. rare nectar with delight, his heart rejoiced in affection.

What the poem says

Ilakkuvaṉ and Cītai also approach the sage and bow. Parattuvācaṉ blesses them, weeping with tender love.

His joy is compared to that of one who drinks the nectar of the gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karuku vār kuḻal caṉakiyōṭu iḷaval kai toḻutē,
aruku cārtara, arun tavaṉ ācikaḷ vaḻaṅki,
uruku kātaliṉ oḻuku kaṇṇīriṉaṉ, uvakai
parukum ār amiḻtu ottu, uḷam kaḷittaṉaṉ, parivāl.