கம்பராமாயணம் 10204 · யுத்த 37.191

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘சித்திர கூடம் தீர்ந்து, தென்திசைத் தீமை தீர்த்திட்டு
இத்திசை அடைந்து எம் இல்லின் இறுத்தமை இறுதி ஆக
வித்தக! மறந்திலேன் யான் விருந்தினை ஆகி, எம்மோடு
இத்தினம் இருத்தி ‘என்றான் மறைகலின் இறுதி கண்டான்.

பொருள் · Meaning in Tamil

மறைகளின் இறுதி கண்டான் - வேத முடிவினை நன்குணர்ந்தவனாகிய பரத்துவாசன்; (இராமனைநோக்கி) வித்தக! - சதுரப்பாடு உடையவனே! சித்திரகூடம் தீர்ந்து - சித்திரகூட மலையிலிருந்து நீங்கி; தென்திசைத் தீமை தீர்த்திட்டு - தெற்குத்திசையில் உள்ள அரக்கர்களாய தீமையைப் போக்கி; இத்திசை அடைந்து - வடதிசை வந்து சேர்ந்து; எம் இல்லம் இறுத்தமை இறுதியாக - என் தவச்சாலையில் தங்கியமை வரையிலும்; மறந்திலேன் யான் - நான் உன்னை ஒரு கணமும் மறக்கவில்லை; விருந்தினையாக - விருந்து ஏற்றுக்கொண்டு; எம்மோடு - எங்களோடு; இத்திறம் - இன்றேபோல்; இருத்தி - இருப்பாயாக; என்றான் -.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'From leaving Cittirakūṭam, ending the evil of the south,
  2. reaching this region and coming to rest in our home, to the very end,
  3. wise one, I have not forgotten you; become our guest and
  4. stay with us like this,' said he who has seen the end of the Vedas.

What the poem says

Parattuvācaṉ, who has grasped the highest truth of the Vedas, tells Irāmaṉ that he has never forgotten him for a moment, from the day Irāmaṉ left Citrakūṭa, through the destruction of the demons in the south, until his arrival today.

He invites Irāmaṉ to accept his hospitality and stay with him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘cittira kūṭam tīrntu, teṉ ticait tīmai tīrttiṭṭu
it ticai aṭaintu em illiṉ iṟuttamai iṟutiyāka
vittaka! maṟantilēṉ yāṉ viruntiṉai āki, emmōṭu
ittiṟam irutti ‘eṉṟāṉ maṟaikaḷiṉ iṟuti kaṇṭāṉ.