கம்பராமாயணம் 10205 · யுத்த 37.192

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி,
சரத வானவர்கள் துன்பம் தணித்து உலகங்கள் தாங்கும்
மரகத மேனிச் செங்கண் வள்ளலே! வழுவா நீதிப்
பரதனது இயல்பும் இன்றே பணிக்குவன் கேட்டி ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

கரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி - கையின் கண் உயர்ந்த கோதண்டம் என்னும் வில்லை வளைத்து இழுத்து; சரத வானவர்கள் துன்பம் தணித்து - உண்மை வாழ்வுள்ள தேவர்களது துயரத்தைப் போக்கி; உலகங்கள் தாங்கும் - உலகமனைத்தையும் பாதுகாக்கின்ற; மரகத மேனிச் செங்கண்வள்ளலே! - மரகத மணி போன்ற மேனியையும் சிவந்த கண்களையும் உடைய கொடையாளனே; 'வழுவா நீதிப் பரதனது இயல்பும் இன்றே பணிக்குவென், கேட்டி' என்றான் - சிறிதும் பிசகாத நீதியை உடைய பரதன் தற்போதுள்ள தன்மையையும் இன்றைக்கே சொல்வேன் கேட்பாயாக என்று சொன்னான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Bending the long bow in your hand and drawing it,
  2. you ended the sorrow of the true gods and uphold the worlds,
  3. generous one with emerald body and red eyes! Of Paratan of unswerving justice,
  4. of his state too I will tell you today; listen,' he said.

What the poem says

The sage praises Irāmaṉ as the protector of gods and worlds, emerald-dark of body, with red eyes, and generous.

He then offers to tell Irāmaṉ how Paratan, whose justice never fails, has been living during the long exile, which Irāmaṉ is anxious to know.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'karatalam ataṉiṉ nīṭu kārmukam vaḷaiya vāṅki,
carata vāṉavarkaḷ tuṉpam taṇittu ulakaṅkaḷ tāṅkum
marakata mēṉic ceṅkaṇ vaḷḷalē! vaḻuvā nītip
parataṉatu iyalpum iṉṟē paṇikkuveṉ kēṭṭi ‘eṉṟāṉ.