கம்பராமாயணம் 10206 · யுத்த 37.193
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(பரதன்) வெயர்த்த மேனியன் - வியர்வை அரும்பிய உடம்புடையான்; விழி பொழி மழையன் - கண்கள் மழைநீர் போலக் கண்ணீர் விடுகின்றதன்மையன்; மூவினையைச் செயிர்த்த சிந்தையன் - பழைய வினைகளைக் கோபித்த மனத்தவன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான் - மனச் சுழற்சியால் வருந்திவருந்திக் கெடுவான்; அயிர்த்து நோக்கினும் தென்திசை அன்றி வேறு அறியான் - ஐயுற்றுப் பார்த்தாலும் (நீ சென்றுள்ள) தென் திசை தவிர வேறு திசைகளைப் பார்க்க அறியான்; பயத்த துன்பமே உருவு கொண்டு என்னலாம்படியான் - அச்சத்துடன் கூடிய துன்பமே உருவம் கொண்டாற் போன்ற வடிவம் உடையவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'His body sweating, his eyes pouring rain, his mind
- angry at his past deeds, he wastes away, suffering and suffering in turmoil;
- even if he looks about in doubt, he knows no direction but the south;
- he is such that one could say fear-born grief itself had taken form.'
What the poem says
Parattuvācaṉ describes Paratan's condition. He is feverish and weeping constantly, angry at the past deeds he thinks brought about this misfortune, and worn down by anxiety.
He keeps gazing only toward the south, where Irāmaṉ went. He looks like grief and dread in human form.