கம்பராமாயணம் 10208 · யுத்த 37.195

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று உரைத்து, ‘அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தனைய தோளும், குலவரைக் குவடும் ஏய்க்கும்
என்று உரைத்தனைய மௌலித் தலை பத்தும் இறுத்த வீர!
நின்தனைப் பிரிந்தது உண்டே யான்? ‘என நிகழ்தினனால்.

பொருள் · Meaning in Tamil

என்று உரைத்து - என்றிவ்வாறு பரத்து வாசன் சொல்லி; அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீலக் குன்று உரைத்தனைய தோளும் குலவரைக் குவடும் ஏய்க்கும் என்று உரைத்தனைய மெளலித் தலை பத்தும் இறுத்த வீர! - இராவணனது நீலமலை என்று சொலத்தகுந்த இருபது தோள்களையும் எட்டுக்குலமலைகளின் சிகரங்கள் எனக் கூறத் தக்க மகுடம் அணிந்த பத்துத் தலைகளையும் அழித்த வீரனே!; யான் நின்தனைப் பிரிந்தது உண்டே? - நான் நின்னை என்றாவது பிரிந்ததுண்டா?; என நிகழ்த்தினான் - என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having said this: 'Hero who broke the arms, said to be twenty, of the demon king,
  2. like blue hills as men say, and his ten crowned heads
  3. which men said were like the peaks of the great mountains,
  4. have I ever been parted from you?' he said.

What the poem says

Parattuvācaṉ ends by declaring that he has never been apart from Irāmaṉ in mind.

He addresses him as the hero who destroyed Irāvaṇaṉ's twenty arms, like blue mountains, and his ten crowned heads, like the peaks of the eight great mountains that hold up the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu uraittu, ‘arakkar vēntaṉ irupatu eṉṟu uraikkum nīlak
kuṉṟu uraittaṉaiya tōḷum, kulavaraik kuvaṭum ēykkum
eṉṟu uraittaṉaiya maulit talai pattum iṟutta vīra!
niṉtaṉaip pirintatu uṇṭē yāṉ? ‘eṉa nikaḻttiṉāṉāl.