கம்பராமாயணம் 10209 · யுத்த 37.196

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘மின்னை ஏய் உழையினானும் விரை மலர்த் தவிசினானும்
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மாதவத்தின் மிக்கோய்!
உன்னையே வணங்கி உன்தன் அருள் சுமந்து உயர்ந்தேன்; மற்று இங்கு
என்னையே பொருவும் மைந்தர் யான் அலாது இல்லை ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

மின்னை ஏய் உமையினானும் - மின்னலை ஒத்த உமாதேவியை உடைய சிவனும்; விரைமலர்த் தவிசினானும் - மணமிக்க உந்தித்தாமரையில் உள்ள பிரமனும்; நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மாதவத்தின் மிக்கோய்! - உன்னையே சிறப்பித்துச் சொல்லுமாறு நீதியோடு கூடிய பெருந்தவத்தில் சிறந்தவனே; உன்னையே வணங்கி உன்தன் அருள் சுமந்து உயர்ந்தேன்- உன்னை வழிபட்டு உனது மனக்கருணையை நிறையப் பெற்று அதனால் உயர்ந்துள்ளேன்; (அதனால்) மற்று இங்கு என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை! என்றான் - இவ்வுலகில் என்னை ஒத்த மகன் நான் அல்லாது வேறு யாரும் இல்லை எனும் பேறு பெற்றேன் என்று கூறினான் (இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You who excel in great penance joined with justice, so that even he whose consort
  2. Umā is like lightning, and he who sits on the fragrant flower, praise you alone!
  3. Bowing to you, bearing your grace, I have risen high; and here
  4. there is no son who equals me but myself,' he said.

What the poem says

Irāmaṉ replies with humility. Even Śiva, consort of Umā, and Brahmā on his lotus praise this sage for his penance and righteousness.

Irāmaṉ says that by worshipping the sage and receiving his grace he has become so exalted that no son in the world is his equal; he is fortunate beyond all others.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘miṉṉai ēy umaiyiṉāṉum virai malart taviciṉāṉum
niṉṉaiyē pukaḻtaṟku otta nīti mātavattiṉ mikkōy!
uṉṉaiyē vaṇaṅki uṉtaṉ aruḷ cumantu uyarntēṉ; maṟṟu iṅku
eṉṉaiyē poruvum maintaṉ yāṉ alātu illai ‘eṉṟāṉ.