கம்பராமாயணம் 10212 · யுத்த 37.199

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அருந்தவன் - பரத்துவாசன்; 'ஐய! - இராம!; நின்னோடு அனிக வெஞ் சேனைக்கு எல்லாம் விருந்து இனிது அமைப்பன் என்னா- உன்னோடு வந்துள்ள அணிவகுப்புற்ற இக்கொடிய சேனைகளுக்கு எல்லாம் விருந்துணவு நன்குறச் செய்து தருவேன் என்று சொல்லி; விளங்கும் முத்தீயின் நாப்பண் புரிந்து ஒர் ஆகுதியை ஈந்து - விளங்குகின்ற வேள்வித்தீயின் நடுவே மந்திரங்களை விரும்பிச் சொல்லி ஓர் அவிர்ப்பாகத்தைக் கொடுத்து; புறப்படும் அளவில் - எழுந்த அக்கணத்திலேயே, திருந்திய வான நாடு சேர வந்து இறுத்தது - இன்பங்கள் நிறைந்த சுவர்க்கலோகம் அப்படியே கீழ்இறங்கி அங்கே தங்கியது.

அன்று, ஏ- அசைகள்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great ascetic said, 'My lord, for you and all your fierce arrayed army
  2. I will prepare a pleasant feast,' and in the midst of the three shining fires
  3. he offered an oblation with due rites; as he rose,
  4. heaven, rich in delights, came down and settled there.

What the poem says

Parattuvācaṉ offers to feast Irāmaṉ and his whole army. He makes an offering into the three sacred fires, and as soon as he rises from the rite, heaven itself with all its pleasures descends and settles around the hermitage.

In the Sanskrit tradition too, Bharadvāja's hospitality is famous for its miraculous abundance.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aruntavaṉ, ‘aiya! niṉṉoṭu aṉika veñ cēṉaikku ellām
viruntu iṉitu amaippeṉ ‘eṉṉā, viḷaṅkum muttīyiṉ nāppaṇ
purintu or ākutiyai īntu puṟappaṭum aḷavil, pōkam
tiruntiya vāṉanāṭu cēra vantu iṟuttatu aṉṟē.