கம்பராமாயணம் 10214 · யுத்த 37.201
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெடியோன் - இராமன்; 'மாருதி! - அனுமனே!; இன்று நாம் பதிவருது முன் - நாம் இன்றைக்கு அயோத்திக்கு வருவதற்கு முன்னாக; ஈண்டச் சென்று - விரைந்து போய்; தீது இன்மை செப்பி அத்தீமையும் விலக்கி நின்ற காலையின் வருதும்' என்று ஏயினன் - எனக்கு ஒரு தீமையும் இல்லை என்பதைப் பரதனுக்குச் சொல்லி அவனுக்கு நேர்ந்து விடும் (தீப்புகல் ஆகிய) தீமையையும் தடுத்து நீ அங்கே இருக்கும் நேரத்தில் வருவேன் என்று ஏவி அனுப்பினான்; (அதுகேட்ட) அவன் - அந்த அனுமன்; 'நன்று' எனா - அப்படியே நல்லது என்று சொல்லி; மோதிரம் கைக்கொடு நடந்தான் - இராமன் அளித்த அடையாளமான கணையாழியை கையில் வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.
உடம்பொடு புணர்த்தலால் இராமன் கூறியதோடு கணையாழியும் தந்தான் என்பதைப் பெற வைத்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Before we reach the city today, Māruti, go swiftly,
- tell him that no harm has come, turn aside that disaster,
- and while you stand there we will come,' the tall one commanded;
- saying 'Good', Aṉumaṉ took the ring in his hand and set off.
What the poem says
Irāmaṉ sends Aṉumaṉ ahead to Paratan to tell him that Irāmaṉ is safe and returning, and so prevent Paratan from entering the fire. Irāmaṉ will arrive while Aṉumaṉ is still there.
Aṉumaṉ takes a signet ring as a token, as he once carried Irāmaṉ's ring to Cītai in Ilaṅkai. The commentary notes the poet lets us infer that Irāmaṉ gave the ring along with the message.