கம்பராமாயணம் 10218 · யுத்த 37.205
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1துன்பு உருக்கவும் சுற்றி உருக்கொணா
என்பு உருக்கும் தகைமையின் ஈட்டத்தான்
முன்பு உருக்கொண்டு ஒருவழி முற்றுறா
அன்பு உருக்கொண்டது ஆம் எனல் ஆகுவான்.
பொருள் · Meaning in Tamil
துன்பு சுற்றி உருக்கவும் - (இராமனைப் பிரிந்துள்ள) பிரிவு என்னும் துன்பம் சூழ்ந்து உருக்குதலால், உருக்க ஒணா என்பு உருக்கும் தகைமையது இட்டது ஆய் - எதனாலும் உருக்கமுடியாத எலும்பையும் உருக்கக்கூடிய தன்மை பொருந்தியதாய்; முன்பு உருக்கொண்டு ஒருவழி முற்றுறா - முன்னொரு காலத்திலும் வடிவம் கொண்டு ஓரிடத்தும் முழுமையாய்த் தோற்றாத; அன்பு உருக் கொண்டது ஆம் எனல் ஆகுவான் - அன்பே ஒரு வடிவம் கொண்டது ஆகும் என்று சொலற்குரியவனாக உள்ளான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As grief surrounded and melted him, he was of such a nature
- that he melted even bones that nothing can melt;
- he was one of whom it might be said that love, which before had never
- taken form and appeared whole in any one place, had taken form.
What the poem says
Paratan's grief at separation from Irāmaṉ is so intense that it melts even his bones, which nothing else can melt.
The poet says that love, which had never before appeared complete in bodily form anywhere, has now taken shape in Paratan.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuṉpu urukkavum cuṟṟi urukka oṇā
eṉpu urukkum takaimaiyatu iṭṭatu ām
muṉpu uruk koṇṭu oru vaḻi muṟṟuṟā
aṉpu uruk koṇṭatu ām eṉal ākuvāṉ.