கம்பராமாயணம் 10219 · யுத்த 37.206

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நினைக்கவும் தடங்கண் இணை நீர்வர
இனத்த தண்டலை நாட்டிருந்தேயும் அக்
கனத்த கந்தமும் காயும் கனிகளும்
வனத்த அல்ல அருந்தலில் வாழ்க்கையான்.

பொருள் · Meaning in Tamil

நினைத்தலும் தடங்கண் இணை நீர் வர - இராமனை நினைத்த அளவில் விசாலமான இருகண்களிலும் நீர்பெருக; இனத்த தண்டலைநாட்டு இருந்தேயும் - கூட்டமான சோலைகள் சூழ்ந்த தனது நாட்டின்கண் இருந்தும்; அக் கனத்த கந்தமும் காயும் கனிகளும் வனத்த அல்ல - அந்த மேன்மையுடைய கிழங்கும் காயும் பழங்களும் ஆய காட்டின்கண் கிடைக்கும் பொருள்களை அல்லாமல் பிறவற்றை, அருந்தல் இல் வாழ்க்கையான் - நுகர்தல் இல்லாத வாழ்க்கை உடையவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as he thought of him, tears flowed from both his wide eyes;
  2. though he lived in a land of clustered groves,
  3. apart from the coarse roots, raw produce and fruits
  4. found in the forest, he lived without eating anything.

What the poem says

The mere thought of Irāmaṉ brings tears to Paratan's eyes. Although he lives in a fertile land full of gardens, he eats nothing but forest food: roots, raw vegetables and fruit.

He shares in this way the life that Irāmaṉ is living in the forest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niṉaittalum taṭaṅ kaṇ iṇai nīr vara
iṉatta taṇṭalai nāṭṭu iruntēyum ak
kaṉatta kantamum kāyum kaṉikaḷum
vaṉatta alla aruntal il vāḻkkaiyāṉ.