கம்பராமாயணம் 10223 · யுத்த 37.210

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1யாண்டு வந்து இங்கு இறுக்கும் என்று எண்ணினான்,
‘மாண்ட சோதிட வாய்மைப் புலவரை
ஈண்டுக் கூய்த்தரு கென்ன, வந்து எய்தினார்,
‘ஆண்தகைக்கு இன்று அவதி ‘என்றார் அரோ.

பொருள் · Meaning in Tamil

யாண்டு வந்து இங்கு இறுக்கும்' என்று எண்ணினான் - இராமன் எப்பொழுது வந்து இங்கு சேர்வான் என்று நினைத்த பரதன்; 'மாண்ட சோதிட வாய்மைப் புலவரை ஈண்டுக் கூஉய்த்தருக' என்ன வந்து எய்தினார் - மாட்சிமை பொருந்திய கணித நூலில் தப்பாமல் கூறும் ஆற்றலுடையாரை இங்கே கூப்பிட்டுத்தருக என்று சொல்ல; வந்து சேர்ந்தவர்களாய சோதிடர்; 'ஆண்தகைக்கு இன்று அவதி' என்றார் - இராமனுக்கு இன்று வருதற்குரிய நாளாகிய காலம் என்று சொன்னார்கள். அரோ - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Wondering when he would arrive here, he said,
  2. 'Call the excellent astrologers of truthful word
  3. and bring them here'; and those who came
  4. said, 'Today is the noble one's appointed day.'

What the poem says

Paratan sends for the astrologers, skilled and accurate in reckoning, to calculate when Irāmaṉ is due.

They announce that today is the very day on which the fourteen years end and Irāmaṉ should return.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1yāṇṭu vantu iṅku iṟukkum eṉṟu eṇṇiṉāṉ,
‘māṇṭa cōtiṭa vāymaip pulavarai
īṇṭuk kūyt taruka eṉṉa, vantu eytiṉār,
‘āṇtakaikku iṉṟu avati ‘eṉṟār arō.