கம்பராமாயணம் 10228 · யுத்த 37.215
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்னை 'இன்னும் அரசியல் இச்சையன் - இன்னமும் பரதன் அரசாளும் ஆசை உடையவனாய் உளன்; அன்னன் ஆகில் அவன் அது கொள்க' - அப்படியிருந்தால் அவன் அரசாட்சியைக் கொண்டிருக்கட்டும்; என்று உன்னினான் கொல் - என்று நினைத்திருப்பானோ; உறுவதை நோக்கினான் - இனிச் செய்யவேண்டுவதை எண்ணிப்பார்த்தவன்; 'இன்னதே நலன்' என்று இருந்தான் - நம் காட்டிலே இருப்பதே நல்லது என்று இருந்து விட்டானாகும். அரோ - அசை
தான் நாடாள விட்டுக்கொடுத்து வராமல் இருந்திருக்கக் கூடும் என்று புதிய காரணத்தைக் கற்பித்துக் கொண்டான் பரதன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Has he thought of me, "He still has a desire for kingship;
- if he is like that, let him keep it",
- and, looking at what was best,
- decided "This is the good course", and stayed away?'
What the poem says
Paratan now torments himself with another idea: perhaps Irāmaṉ believes that Paratan still wants to be king, and has generously chosen to stay in the forest so that Paratan can keep the throne.
The commentary notes that Paratan invents this new reason for Irāmaṉ's delay out of his own distress.