கம்பராமாயணம் 10229 · யுத்த 37.216

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘அனைத்தும் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக;
வனத்து இருக்க : இவ் வையம் புகுதுக
நினைத்திருந்து நெடுந்துயர் மூழ்கிலேன்;
மனத்து மாசு என் உயிரோடும் வாங்குவேன்.

பொருள் · Meaning in Tamil

அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக - அத்தனைக் காரணங்களில் எது ஒன்று ஆனாலும் ஆகட்டும்; வனத்து இருக்க; வையம் புகுதுக - அவன் காட்டில் இருக்கட்டும் அல்லது நாட்டுக்குள் வரட்டும்; (அது பற்றியும் எனக்குக் கவலை யில்லை) நினைத்து இருந்து நெடுந்துயர் மூழ்கிலேன் - பலபடியாக நினைத்து நினைத்துப் பெருந்துன்பத்தில் மூழ்க மாட்டேன்; மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன் - என் மனத்துன்பத்தை என் உயிரோடு நீக்கிக் கொள்வேன்.

நான் இறந்தால் என் மனத்துன்பமும் போய்விடும் என்று கருதித் தற்கொலைக்குத் துணிகிறான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Whichever of all these it may be, so be it;
  2. let him stay in the forest, or come into this land;
  3. I will not sink into long grief brooding on it;
  4. I will remove the stain of my mind together with my life.'

What the poem says

Paratan decides that it no longer matters why Irāmaṉ has not come, or whether he comes at all. He will not go on suffering in endless speculation.

He resolves to end his mental torment by giving up his life, as he vowed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṉaittil aṅku oṉṟum āyiṉum ākuka;
vaṉattu irukka: iv vaiyam pukutuka
niṉaittu iruntu neṭun tuyar mūḻkilēṉ;
maṉattu mācu eṉ uyirōṭum vāṅkuvēṉ.