கம்பராமாயணம் 10231 · யுத்த 37.218

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தொழுது நின்ற தன் தம்பியைத் தோய்கணீர்
எழுது மார்பகத்து இறுகத் தழுவினான்
அழுது, ‘வேண்டுவது உண்டு ஐய! அவ் வரம்,
பழுது இல் வாய்மையினாய்! தரற்பாற்று ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

தொழுது நின்ற தன் தம்பியை - வணங்கி நின்ற தன் தம்பி சத்துருக்கனை; தோய் கணீர் எழுது மார்பத்து இறுகத் தழுவினான் - நிறைந்த கண்ணீரால் மெழுகப் பெற்ற தன் மார்பில் பரதன் நன்கு தழுவி; அழுது - அவலித்து; ஐய! - அய்யனே!; வேண்டுவது உண்டு - நின்பால் நான் வேண்டிக் கொள்வது ஒன்று உண்டு; அவ்வரம் - அந்த வரத்தை; பழுது இல் வாய்மையினாய்! - குற்றமற்ற சத்தியம் உடையவனே! தரற்பாற்று - தரவேண்டும்; என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His brother, who stood with joined hands, he clasped tightly
  2. to his breast painted with streaming tears, and
  3. weeping said, 'There is something I ask, my lord; that boon,
  4. you of faultless truth, you must grant.'

What the poem says

Paratan embraces Catturukkaṉ, pressing him to a chest drenched with tears.

Weeping, he asks his brother, whom he praises as unfailingly truthful, to promise to grant him a boon. What he asks follows in the next verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1toḻutu niṉṟa taṉ tampiyait tōy kaṇīr
eḻutu mārpattu iṟukat taḻuviṉāṉ
aḻutu, ‘vēṇṭuvatu uṇṭu aiya! av varam,
paḻutu il vāymaiyiṉāy! taraṟpāṟṟu ‘eṉṟāṉ.