கம்பராமாயணம் 10236 · யுத்த 37.223

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘
“
பாட வேறுபாடு · Project Madurai reads
1“‘மன்னின்பின் வளநகரம் புக்கிருந்து வாழ்ந்தானே, பரதன் என்னும்
சொல்நிற்கும் ‘‘ என்று அஞ்சி, புறத்து இருந்தும் அருந்தவமே தொடங்கினாயே!
“என்னின்பின் இவன் உளனாம் “ என்றே பின் அடிமையுனக்கு இருந்த தேனும்
உன்னின்பின் இருந்ததுவும் ஒருகுடைக்கீழ் இருந்ததுவும் ஒக்கும் என்றான்.

பொருள் · Meaning in Tamil

மன்னின் பின் வளநகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் சொல் நிற்கும் - இராமனாகிய அரசன் காடு போன பிறகு அயோத்தி நகரம் புகுந்து அரசு வீற்றிருந்து வாழ்ந்தான் இந்த பரதன் என்ற வார்த்தை உலகில் உண்டாகும்; என்று அஞ்சி புறத்து இருந்தும் அருந்தவமே தொடங்கினாயே - என்று பயந்து அயோத்திக்குப் புறத்தே நந்தியம்பதியில் இருந்தும் அரிய தவத்தையே செய்யத் தொடங்கினாய் அல்லவா?; என்னின் பின் இவன் உளனாம் என்றே - நான் அக்கினிப் பிரவேசம் செய்து உயிரை விட்டபிறகு இவன் பிழைத்திருப்பான் என்று; உன் அடிமை உனக்கு இருந்த தேனும் - உன் அடியவனான என் விஷயத்தில் உனக்கு எண்ணம் இருந்தாலும்; உன்னின் பின் இருந்ததுவும் - நீ இறந்த பிறகு உனக்குப் பிறகு உடன் இறவாமல் உயிரோடு இருந்ததுவும்; ஒரு குடைக்கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான் - நீ உள்ளபோதே உன்னை அகற்றி ஒரு வெண் கொற்றக் குடைக்கீழ் நான் இருந்து அரசாள்வதும் ஒன்றுதானே என்று கூறி வருந்தினான்.

இராமன் அடிமையாகிய தன்னைப் பற்றி உணர்ந்த பரதன், தன் அடிமையாகிய சத்துருக்கனாகிய என்னைப் பற்றி அங்ஙனம் உணர்ந்தானில்லையே என்ற ஏக்கம் சத்துருக்கன் மனத்தைப் பிழிந்து இங்ஙனம் பேசச் செய்கிறது. அவலத்தில் ஆழமான கவிச் சுவையைக் கம்பர் காட்டும் இடமாகும் இது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Fearing that men would say "After the king left, Paratan entered
  2. the rich city and lived there", you stayed outside and began hard penance!
  3. Even if, thinking "He will live on after me", you hold this view of me your servant,
  4. to remain alive after you is the same as to sit beneath the one umbrella,' he said.

What the poem says

Catturukkaṉ reproaches Paratan. Paratan feared the disgrace of being said to have enjoyed the kingdom while Irāmaṉ was away, so he lived as an ascetic outside the city.

Yet he expects Catturukkaṉ to survive his death and take the crown. For Catturukkaṉ, outliving Paratan would be as shameful as Paratan usurping the throne under the royal white umbrella. The commentary notes his pain that Paratan, so devoted to Irāmaṉ, fails to see Catturukkaṉ's equal devotion to himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘maṉṉiṉ piṉ vaḷa nakaram pukku iruntu vāḻntāṉē, parataṉ eṉṉum
col niṟkum ‘‘ eṉṟu añci, puṟattu iruntum arun tavamē toṭaṅkiṉāyē!
“eṉṉiṉ piṉ ivaṉ uḷaṉām “ eṉṟē uṉ aṭimai uṉakku iruntatēṉum
uṉṉiṉ piṉ iruntatuvum oru kuṭaik kīḻ iruppatuvum okkum eṉṟāṉ.