கம்பராமாயணம் 10239 · யுத்த 37.226
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அவள்) மந்திரியர், தந்திரியர், வள நகரத்தவர், மறையோர், மற்றும் சுற்ற - அமைச்சர், சேனைத் தலைவர் அயோத்தி நகர மாந்தர் அந்தணர் மற்றும்உள்ளோர் தன்னைச் சுற்றிவர; சுந்தரியர் எனைப் பலரும் கை தலை மேல் பெய்து இரங்கி தொடர்ந்து செல்ல - மகளிர் முதல் அனைவரும் தலைமேல் கையால் அடித்துக்கொண்டு மனமிரங்கி அவனைப் பின்பற்றிச் செல்ல; இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி ஏத்த - இந்திரன் முதலான தேவர்களும் முனிவர்களும் பரம் பொருளை வணங்கித் தோத்திரம் செய்ய; அந்தர மங்கையர் வணங்க - தேவப் பெண்கள் வணங்க; அழுது அரற்றி - அழுது பலவாறு புலம்பி; பரதனை வந்து அடைந்தாள் - பரதனை வந்து சேர்ந்தாள்.
அன்று, ஏ, அசைகள். ஏத்த என்றது இவளுக்கு நலமாகவும் இச்செயல் இனிதாக முடியவும் வாழ்த்தலாகும். பரம்பொருளின் அன்னையாதலின் தேவமங்கையர் வணங்கினர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Ministers, commanders, people of the rich city, Brahmins, and the
- fair women of the household, many beyond count, hands on their heads, grieving, followed;
- while the immortals with Indra first, and the great sages, bowed and praised,
- and the women of heaven saluted, weeping and wailing, she came to Paratan.
What the poem says
Kōcalai is followed by a great crowd: ministers, army chiefs, citizens, Brahmins and the palace women, all beating their heads in grief.
In the sky the gods and sages pray for a good outcome, and the celestial women bow to Kōcalai as the mother of the Supreme Being. Weeping, she reaches Paratan.