கம்பராமாயணம் 10240 · யுத்த 37.227

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து அசைய மேனி தள்ள,
எரியமைக்கும் மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து,
சொரிவு அமைப்பது அரிது ஆய மழைக் கண்ணாள் தொடருதலும், துணுக்கம் எய்தா,
பரிவு அமைந்த திருமனத்தான் அடிதொழுதான்; அவள்புகுந்து பற்றிக் கொண்டாள்.

பொருள் · Meaning in Tamil

விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஒசிய - விரிந்து பொருந்திய நீண்ட சடை முதுகின்கண் அசைந்து விழுந்து வளைய; மேனி தள்ள - உடம்பு தடுமாற; எறி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை - நெருப்பு உண்டாக்கிய இடுகாட்டை அடைகின்ற அன்பு மகனாகிய பரதனை; இடையே வந்து - நடுவில் புகுந்து வந்து; சொரிவு அமைப்பது அரிது ஆய மழைக் கண்ணாள் தொடருதலும் - சொறிந்து உண்டாக்குதல் இயலாது என்று சொல்லும்படி நீர் மழை போல ஒழுகுகின்ற கண்ணுடைய கோசலை பின்பற்றிக் கொள்ளுதலும்; பரிவு அமைந்த திரு மனத்தான் - அன்பால் நிறைந்தமைந்த நன்மனம் உடைய பரதன்; துணுக்கம் எய்தா - நடுக்கமுற்று; அடிதொழுதான் - அவள் காலில் வீழ்ந்து வணங்கினான்; அவள் புகுந்து பற்றிக் கொண்டாள் - கோசலை அவனிடையே புகுந்து அவனை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Her long spreading hair slipping down her back and falling loose, her body staggering,
  2. to her beloved son on his way to the burning ground where the fire was laid, coming between,
  3. she whose rain-like eyes could not be made to stop pouring followed him; trembling,
  4. he of the loving heart bowed at her feet; and she rushed in and seized him.

What the poem says

Kōcalai, her long hair falling loose and her body faltering, catches up with Paratan as he walks to the cremation ground where the fire has been prepared. Her eyes pour tears like rain.

Paratan, tender-hearted, trembles and bows at her feet, and she grasps him tightly to hold him back.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viri amaitta neṭu vēṇi puṟattu acaintu vīḻntu ociya mēṉi taḷḷa,
eṟi amaitta mayāṉattai eytukiṉṟa kātalaṉai iṭaiyē vantu,
corivu amaippatu aritu āya maḻaik kaṇṇāḷ toṭarutalum, tuṇukkam eytā,
parivu amainta tiru maṉattāṉ aṭi toḻutāṉ; avaḷ pukuntu paṟṟik koṇṭāḷ.