கம்பராமாயணம் 10247 · யுத்த 37.234
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1“‘இறக்கையும் சிலர் ஏகலும் மோகத்தால்
பிறக்கையும் கடன் “ என்று பின் பாசத்தை
மறக்கை காண் மகனே! வலி ஆவதும்
துறக்கை தானும் என்றாள் மனம் தூய்மையாள்.
பொருள் · Meaning in Tamil
மனம் தூய்மையாள் - தூய மனம் உடைய கோசலை; மகனே! - பரதனே!; இறக்கையும் - இறப்பதும்; சிலர் ஏகலும் - சிலர் உலகைப் பிரிந்து செல்லுதலும்; மோகத்தால் பிறக்கையும் - ஆசையின் காரணமாக மீண்டு பிறப்பெடுப்பதும்; கடன் - உலக முறைமை, என்று - எனக்கருதி; பின் பாசத்தை மறக்கை வலி ஆவது காண் - பிறகு பாசமாகிய பற்றை மறந்துவிடுதல் தான் உள்ள வலிமை என்பதாகும் என அறிவாயாக, துறக்கை தானும் - துறப்பது என்பதும் (அதுவே); என்றாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Dying, some departing, and through desire
- being born again, these are the way of things; and then, the bond of attachment
- to forget, see, my son, is what true strength is,
- and that too is renunciation,' said she of pure mind.
What the poem says
Kōcalai offers Paratan spiritual counsel. Death, departure and rebirth through desire are the ordinary way of the world.
True strength lies in letting go of the bonds of attachment, and that is real renunciation, not throwing away one's life in grief. She is called pure in mind.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘iṟakkaiyum cilar ēkalum mōkattāl
piṟakkaiyum kaṭaṉ “ eṉṟu piṉ pācattai
maṟakkaikāṇ makaṉē! vali āvatu
tuṟakkaitāṉum eṉṟāḷ maṉam tūymaiyāḷ.