கம்பராமாயணம் 10249 · யுத்த 37.236

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘யானும் மெய்யினுக்கு இன் உயிர் ஈந்துபோய்
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்;
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்?
ஏனையோர்க்கு இது இழுக்கு இல் வழக்கு அன்றோ?

பொருள் · Meaning in Tamil

யானும் - மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய் வானுள் எய்திய மன்னவன் மைந்தன் - நானும் வாய்மைக்குத் தன்னுயிரைக் கொடுத்துச் சென்று விண்ணுலகடைந்த தயரதன் மகன்தான்; (வாய்மை காப்பது என்பது) கானுள் எய்திய காகுத்தற்கே கடன்? - காட்டிற்குச் சென்ற இராமனுக்கு மட்டுமா முறைமை (எனக்கில்லையற); ஏனையோர்க்கும் - தயரதன் பிள்ளைகளாய என் போன்றவர்களுக்கும்; இது - வாய்மை காப்பது; இழுக்கு இல் வழக்கு அன்றோ? - குற்றம் இல்லாத முறைமை அல்லவா (என் சபத வாய்மை காத்து தயரதன் மகன் என்று குலத்தின் ஒழுக்கத்தை நிலை நிறுத்துவேன் என்றான்.)

ஆல் - உரையசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I too am the son of the king who gave his sweet life
  2. for truth and went to the heavens;
  3. is it a duty only for Kākuttaṉ, who went into the forest?
  4. For the others too, is this not the faultless way?'

What the poem says

Paratan reminds Kōcalai that he too is the son of Tacarataṉ, who died rather than break his word.

Keeping one's word is not the duty of Irāmaṉ, Kākuttaṉ, descendant of Kakutstha, alone; it binds all of Tacarataṉ's sons. Paratan will uphold the family's honour by keeping his vow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘yāṉum meyyiṉukku iṉ uyir īntu pōy
vāṉuḷ eytiya maṉṉavaṉ maintaṉāl;
kāṉuḷ eytiya kākuttaṟkē kaṭaṉ?
ēṉaiyōrkkum itu iḻukku il vaḻakku aṉṟō?