கம்பராமாயணம் 10251 · யுத்த 37.238
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று தீயினை எய்தி - என்று சொல்லி, நெருப்பை அணுகி; இரைத்து எழுந்து ஒன்று பூசலிடும் உலகோருடன் - கூக்குரலிட்டு சேர்ந்து ஆரவாரம் செய்து அழுகின்ற உலக மக்களுடன்; நின்று பூசனை செய்கின்ற நேசற்கு - சேர்ந்து நின்று விழுவதற்கு முன்பாக அக்கினியைப் பூசிக்கின்ற அன்பனாகிய பரதனுக்கு முன்; குன்றுபோல் நெடு மாருதி கூடினான் - மலை போன்ற பேருருவுடைய அனுமன் வந்து சேர்ந்தான்.
பரதன் எரியில் வீழ்வது பற்றி உலகோர் அரற்றிப் பூசல் இட்டனர் 'நேசற்கு' 'நேசன்கண்' ஏழாவதன் கண் நான்காவது வந்த உருவு மயக்கம் எனக் கொண்டு பொருள் உரைத்தலும் ஒன்று. முன் வருவிக்கப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying this, he went to the fire; and as he stood with the people
- of the world, who rose up crying and wailed together,
- worshipping the fire, to that loving one
- tall Māruti, huge as a mountain, came.
What the poem says
Paratan approaches the pyre and stands worshipping the fire before entering it, while the people around him weep and cry out.
At that moment Aṉumaṉ, huge as a mountain, arrives in front of him, just in time.