கம்பராமாயணம் 10253 · யுத்த 37.240

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆக்கி மற்று அவன் ஆய்மலர்த் தாள்களைத்
தாக்கத் தன்தலை தாழ்த்து வணங்கி கை
வாக்கின் கூடப் புதைத்து ‘ஒருமாற்றம் நீ
தூக்கிக் கொள்ளத் தகும் ‘எனச் சொல்லினான்.

பொருள் · Meaning in Tamil

ஆக்கி - அவ்வாறு நெருப்பை அவித்துக் கரியாக்கி; மற்று அவன் ஆய்மலர்த் தாள்களைத் தாக்கத் தன்தலை தாழ்ந்து வணங்கி - அப்பரதனது அழகிய மலர் போன்ற திருவடிகளை மோதும்படி நெருக்கமாகத் தன் தலையால் தாழ்ந்து வணக்கம் செய்து; கை வாக்கின் கூடப் புதைத்து - கையால் வாயை நன்கு மூடிக் கொண்டு; ஒரு மாற்றம் நீ தூக்கிக் கொள்ளத் தகும்' எனச் சொல்லினான் - ஒரு சொல் நீ ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளத் தகுவது என்று சொன்னான்;

தலை வணங்குதல், வாய் புதைத்தல் பெரியோர்பால் செய்யத்தகும் அடக்கமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having done so, bowing his head low so that it struck
  2. Paratan's fine flower-like feet, and covering his mouth
  3. closely with his hand, he said, 'There is one word
  4. that you should weigh and accept.'

What the poem says

Having put out the fire, Aṉumaṉ bows so low that his head touches Paratan's feet. He covers his mouth with his hand as he speaks, a traditional mark of respect toward a superior.

He asks Paratan to consider carefully what he is about to say.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ākki maṟṟu avaṉ āy malart tāḷkaḷait
tākkat taṉ talai tāḻntu vaṇaṅki kai
vākkiṉ kūṭap putaittu ‘oru māṟṟam nī
tūkkik koḷḷat takum ‘eṉac colliṉāṉ.