கம்பராமாயணம் 10255 · யுத்த 37.242
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொய் இலாய்! - சத்தியவானே; ஒன்றுதான் உளது - நான் கூற வேண்டுவது ஒன்றுதான் இருக்கிறது; உன் அடியேன் சொலால் - உன்னுடைய அடியேனாகிய என் சொல்லால்; நேமிச் சுடர் நெடுங் குன்று தோன்றளவும் - வட்டமான ஒளி வடிவுடைய சூரியன் உதயமலையில் தோன்றுகின்ற அளவு வரையும்; நின்று தாழ்த்தருள் - தாமதித்து நின்றருளுவாயாக; இது குன்று மேல் - இராமன் இதற்குள் வருவான் என்ற என் வார்த்தை பழுது படுமானால்; நீயும் உலகமும் பொன்றும் - நீயும் ஏன் உலகமும் கூட அழிந்துபடும் (இது சத்தியம்) தன்னைப் பரதனது அடியேன் என்று சொல்லி பரதனை அன்பாற் பிணித்த அனுமனது சொற் சாதுரியம் காண்க. அவன் சொல்லின் செல்வன் அன்றோ.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'There is only one thing: by the word of me your servant,
- stay and delay until the sun's disc appears
- over the tall mountain; if this fails,
- then you may die, and the world too, you who are without falsehood.'
What the poem says
Aṉumaṉ asks Paratan to wait until sunrise. If his promise that Irāmaṉ will come before then proves false, Paratan may carry out his vow, and the world will perish with him.
The commentary admires Aṉumaṉ's tact: by calling himself Paratan's servant he binds Paratan with affection. He is, after all, the master of words.