கம்பராமாயணம் 10257 · யுத்த 37.244
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘அண்டர் நாதன் அருளின் அளித்துளது
உண்டு ஒர் பேர் அடையாளம்; உனக்கு அது
கொண்டு வந்தனென்; கோதறு சிந்தையாய்!
கண்டு கொண்டு அருள்வாய் ‘எனக் காட்டினான்.
பொருள் · Meaning in Tamil
கோது அறு சிந்தையாய்! - குற்றம் அற்ற மனம் உடைய பரதனே!; அண்டர் நாதன் அருளி அளித்துளது ஓர் பேர் அடையாளம் உண்டு, அது உனக்கு கொண்டு வந்தனென், கண்டு கொண்டருள்வாய் எனக் காட்டினான் - தேவதேவனாய் இராமபிரான் அருள் செய்து அன்பினால் தந்தது ஒரு பெரிய அடையாளம் இருக்கிறது; அதனை உனக்காகக் கொண்டு வந்தேன். பார்த்துப் பெற்றுக்கொண்டருள்வாயாக' என்று சொல்லி கணையாழியைக் காண்பித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The lord of the gods graciously gave
- a great token; I have brought it
- for you; you of flawless mind,
- see it and accept it,' and he showed it.
What the poem says
Aṉumaṉ produces the signet ring that Irāmaṉ, lord of the gods, gave him as proof that his message is genuine.
He asks Paratan, whose mind is without flaw, to look at it and accept it.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṇṭar nātaṉ aruḷi aḷittuḷatu
uṇṭu ōr pēr aṭaiyāḷam; uṉakku atu
koṇṭu vantaṉeṉ; kōtu aṟu cintaiyāy!
kaṇṭu koṇṭaruḷvāy ‘eṉak kāṭṭiṉāṉ.