கம்பராமாயணம் 10261 · யுத்த 37.248

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆதி வெந்துயர் அல்லால் அருந்தல் இன்மையால்
ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய்
‘ஏதிலன் ஒருவன்கொல் ‘என்னல் ஆயது;
மாதிரம் வளர்ந்தன வயிரத் தோள்களே.

பொருள் · Meaning in Tamil

ஆதி வெந்துயர் அலால் - இராமனைப் பிரிந்தது முதலே கொடிய துன்பமே; மகிழ்ச்சி இல்லாமையாலும்; அருந்தல் இன்மையால் - நல்ல உணவுகளை உண்ணுதல் இன்மையாலும்; ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய் - ஊதினால் பறப்பதாக வற்றிப் போன உடம்பானது போய்; ஏதிலன் ஒருவன் கொல் என்னல் ஆயது - இவன் பரதனல்ல அயலான் ஒருவன் போலும் என்று ஐயுறும்படி ஆயிற்று; வயிரத் தோள்கள் மாதிரம் வளர்ந்தன - அவனுடைய வலிய தோள்கள் திசையளவும் வளர்ந்தன.

ஏ - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because he had tasted nothing but the cruel grief since the first,
  2. his body, so dried up that it would fly away if blown upon, was gone;
  3. one might say, 'Is this some stranger?';
  4. his diamond-hard shoulders grew to fill the directions.

What the poem says

Paratan's body had been so wasted by grief and fasting since Irāmaṉ's departure that a puff of breath could have blown it away.

Now joy transforms him so completely that people wonder whether he is a stranger. His strong shoulders swell to the size of the horizons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āti ven tuyar alāl aruntal iṉmaiyāl
ūtuṟap paṟappatāy ularnta yākkai pōy
‘ētilaṉ oruvaṉkol ‘eṉṉal āyatu;
mātiram vaḷarntaṉa vayirat tōḷkaḷē.