கம்பராமாயணம் 10266 · யுத்த 37.253

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அத்திறத்து ஆண்தகை அனுமன் தன்னை ‘நீ
எத்திறத்தாய்? எமக்கு இயம்பி ஈதியால்!
முத் திறத்தவருளே ஒருவன் மூர்த்தியை
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன் ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

அத்திறத்து ஆண்தகை - அத்தன்மைகளை உடைய ஆண்களிற் சிறந்தவனாகிய பரதன்; அனுமன் தன்னை - அநுமனை; நீ எத்திறத்தாய்? எமக்கு இயம்பி ஈதி - நீ எத்தன்மை உடையவன் என்று உன்னைப் பற்றி எங்களுக்குச் சொல்லி அருளுக; முத்திறத்தவருளே ஒருவன் ஒத்திருந்தாய் மூர்த்தி வேறு என உணர்கின்றேன்' என்றான் - மும்மூர்த்திகளுள் ஒருவனை ஒத்திருக்கின்றாய், வடிவம் மட்டும் வேறாய் உள்ளது என ஊகித்தறிகிறேன் என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The manly one in that state said to Aṉumaṉ, 'You,
  2. of what nature are you? Tell us, and grant it!
  3. Of the three gods you resemble one, only your form
  4. is different, so I perceive,' he said.

What the poem says

Calming a little, Paratan asks Aṉumaṉ who he really is.

He senses that Aṉumaṉ is like one of the three great gods, Brahmā, Viṣṇu and Śiva, appearing in a different form.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1at tiṟattu āṇtakai aṉumaṉtaṉṉai ‘nī
et tiṟattāy? emakku iyampi ītiyāl!
mut tiṟattavaruḷē oruvaṉ mūrtti vēṟu
ottiruntāy eṉa uṇarkiṉṟēṉ ‘eṉṟāṉ.