கம்பராமாயணம் 10268 · யுத்த 37.255
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1காற்றினுக்கு அரசன்பால் கவிக் குலத்தினுள்
நோற்றுளாள் வயிற்றின் வந்து உதித்து, நும்முனாற்கு
ஏற்றிலா அடித்தொழில் ஏவலாள் ஆனேன்;
மாற்றினென் உரு, ஒரு குரங்கு, மன்ன! யான்.
பொருள் · Meaning in Tamil
மன்ன! - பரதனே! காற்றினுக்கு அரசன் பால்- வாயு தேவனிடமாக; கவிக்குலத்தினுள் நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து - குரங்குக் கூட்டத்துள் தவம் செய்தவள் வயிற்றில் வந்து பிறந்து; நும் முனாற்கு - உம்முடைய அண்ணனுக்கு; ஏற்றிலா அடித்தொழில் ஏவலாளனேன் - அவருடைய பெருமைக்குச் சிறிதும் ஒவ்வாத அடிமைத்தொழில் புரியும் பணியாளன்; உரு மாற்றினென் - வடிவை மாற்றிக்கொண்டுள்ளேன்; யான் ஒரு குரங்கு -.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Born of the King of the Winds, through the womb of one
- who did penance among the race of monkeys, I am a servant
- doing lowly service, unworthy of your elder brother;
- I have changed my form; I am a monkey, O king.'
What the poem says
Aṉumaṉ introduces himself. He is the son of Vāyu, the wind god, and of a monkey mother who had performed austerities, Añcaṉai.
He calls himself a humble servant of Irāmaṉ and admits that his Brahmin appearance is a disguise; in truth he is a monkey.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṟṟiṉukku aracaṉpāl kavik kulattiṉuḷ
nōṟṟaṉaḷ vayiṟṟiṉ vantu utittu, num muṉāṟku
ēṟṟilā aṭit toḻil ēvalāḷaṉēṉ;
māṟṟiṉeṉ uru, oru kuraṅku, maṉṉa! yāṉ.