கம்பராமாயணம் 10269 · யுத்த 37.256

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘அடித்தொழில் நாயினேன் அருப்ப யாக்கையைக்
கடித்தடந் தாமரைக் கண்ணின் நோக்கு ‘எனா
பிடித்த பொய் உருவினைப் பெயர்த்து நீக்கினான்
முடித்தலம் வானவர் நோக்கின் முந்துவான்.

பொருள் · Meaning in Tamil

அடித்தொழில் நாயினேன் அருப்ப யாக்கையைக - அடிமைத் தொழில் செய்யும் கீழான எனது சிறுமையான குரங்குடம்பை; கடித்தடந் தாமரைக் கண்ணின் நோக்கு எனா - மணம் வீசும் அகன்ற தாமரை மலர் போன்ற உன் கண்களால் பார்ப்பாயாக என்று; பிடித்த பொய் உருவினைப் பெயர்த்து நீக்கினான் - அப்போது எடுத்திருந்த பொய்யான மறையவர் வடிவத்தை மாற்றிப் போக்கினான்; முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான் - முடியானது தேவர்கள் கண்களில் படும்படி மேற்பட்டு வளர்வான் ஆனான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Look with your fragrant, wide lotus eyes
  2. at the puny body of me, a dog doing service at the feet,'
  3. he said, and cast off the false form he had taken,
  4. and grew so that his crown came into the gods' sight.

What the poem says

Aṉumaṉ, humbly calling himself a dog serving at Irāmaṉ's feet, asks Paratan to see his real body.

He sheds his Brahmin disguise and grows to his true giant size, until his head reaches the sky where the gods can see it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṭit toḻil nāyiṉēṉ aruppa yākkaiyaik
kaṭit taṭan tāmaraik kaṇṇiṉ nōkku ‘eṉā
piṭitta poy uruviṉaip peyarttu nīkkiṉāṉ
muṭittalam vāṉavar nōkkiṉ muṉṉuvāṉ.