கம்பராமாயணம் 10297 · யுத்த 37.284
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
போகின்ற காலை - அந்த இராவணன் இலங்கைக்குப் போம்பொழுது; ஏற்ற சடாயுவைப் பொருது வீட்டி - தன்னை எதிர்த்த சடாயுவைப் போர் செய்து வீழ்த்தி; வேகின்ற உள்ளத்தாளை வெஞ்சிறை அதனின் வைத்தான் - வெந்த உள்ளமுடைய பிராட்டியைக் கொடுஞ் சிறைக்கண் வைத்தான் (பின் இராமன்); ஏகின்ற வஞ்ச மான் மாரீசன் கொன்று - ஓடுகின்ற வஞ்சத் தன்மையுள்ள மானாகிய மாரீசனைக் கொன்று; இளவலோடு - இலக்குவனோடு வந்து; பாகின்ற சீர்த்தி அண்ணல் தந்தையைப் பரிவின் கண்டான் - பரவுகின்ற புகழ் உடைய தலைமையோன் ஆகிய சடாயுவை அன்போடு பார்த்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'As he went, he fought and felled Caṭāyu who opposed him,
- and kept her of burning heart in cruel captivity;
- Irāmaṉ killed Mārīcaṉ, the fleeing false deer, and with his younger brother
- the lord of spreading fame lovingly saw the one who was a father to him.'
What the poem says
On his way to Ilaṅkai, Irāvaṇaṉ fought and struck down Caṭāyu, who tried to rescue Cītai, and then imprisoned the grieving Cītai.
Meanwhile Irāmaṉ killed Mārīcaṉ, the deceitful deer, and returned with Ilakkuvaṉ to find the dying Caṭāyu, whom he regarded as a father.