கம்பராமாயணம் 10307 · யுத்த 37.294

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இலக்குவன் பகழி ஒன்றால் இந்திரசித்து என்று ஓதும்
விலக்கரு வலத்தினானும் இளைஞரும் கிளையும் வீழ்ந்தார்
அலக்கண் உண்டு உழலும் தேவர் அலர்மழை தூவி ஆர்த்து, அன்று
உலக்குநர் குழுக்கள் தோறும் உடற்குறை ஆடல் கண்டார்.

பொருள் · Meaning in Tamil

இலக்குவன் பகழி ஒன்றால் - இலக்குவனது அம்பு ஒன்றினாலே; இந்திரசித்து என்று ஓதும் விலக்கு அரும் வலத்தினானும் இளைஞரும் கிளையும் வீழ்ந்தார் - தடுக்கரிய வல்லமையுடைய இந்திரசித்தும் அவன் தம்பியரும் உறவினர்களும் இறந்தொழிந்தனர்; மலக்கம் உண்டு உழலும் தேவர் - அரக்கர்களால் கலங்கித் திரியும் தேவர்கள்; மலர் மழை தூவி ஆர்த்து - மலரை மழை போல் சொரிந்து பேரொலி செய்து; அன்று - அப்போர் நடந்த போது; உலக்குநர் குழுக்கள் தோறும் - இறந்தவர் கூட்டத்தில் எல்லாம்; உடற்குறை ஆடல் கண்டார் - கவந்தங்கள் ஆடுவதைக் கண்டார்கள்.

உடற்குறை ஆடல் விரிவினை 95/2 - 9513 பாடல்களில் கண்டு இன்புறுக. இந்தப் பாடல் முன்பாடலுக்கு முன் அமைவது பொருத்தமாக இருக்கும். இந்திரசித்து வதம் முடிந்து இராவணவதம் ஆதலின் ஆயினும் கும்பகருண வதம் பின்னிடும் ஆதலின் முன் அமைந்தது போலும். செய்திகளைத் தொகுத்துக் கூறல் என்னும் அளவில் ஒரு சேரக் கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'By a single arrow of Ilakkuvaṉ, the one called Intiracittu,
  2. of irresistible might, fell, and his younger brothers and his kin;
  3. the gods, who had wandered in confusion, showered flowers and shouted, and then
  4. in every heap of the slain they saw headless trunks dancing.'

What the poem says

Aṉumaṉ recounts the death of Intiracittu, Irāvaṇaṉ's mighty son, killed by a single arrow from Ilakkuvaṉ, along with his brothers and relatives. The gods rained flowers in celebration.

On the battlefield, headless bodies danced among the dead, a stock image of epic battle. The commentary notes this verse would fit better before the previous one, but the summary need not follow strict order.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ilakkuvaṉ pakaḻi oṉṟāl intiracittu eṉṟu ōtum
vilakka aru valattiṉāṉum iḷaiñarum kiḷaiyum vīḻntār
malakkam uṇṭu uḻalum tēvar malar maḻai tūvi ārttu, aṉṟu
ulakkunar kuḻukkaḷtōṟum uṭaṟ kuṟai āṭal kaṇṭār.